அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்கு கேப்டன் இவர்தான். 2021 ஆம் ஆண்டு தலைமை இவர்தான் – அணி நிர்வாகம் அறிவிப்பு

Kasi

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வருடம் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது இல்லை. விளையாடிய அனைத்து தொடர்களிலும் பெற்று சென்ற ஒரே அணி சென்னை அணிதான். இதில் 8 முறை இறுதிப்போட்டி சென்றுள்ளது மூன்று முறை கோப்பையை கைப்பற்றியது.

இப்படிப்பட்ட பெரிய சாதனைகளுக்கு இருப்பிடமாக இருக்கும் சென்னை அணி இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறுகிறது. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அந்த அணியின் நிர்வாகத்திற்கும் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தவறுக்கு காரணம் மூத்த வீரர்களை வைத்து இன்னும் ஆடிக் கொண்டிருப்பது என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருக்கிறார். ஆனால் அணியின் கேப்டன் தோனி பெரிதாக இதனை பற்றி கருத்துக் கூறவில்லை. ஒவ்வொரு போட்டியில் என்ன நடக்கிறதோ அதனை பற்றி மட்டும் கூறி விட்டு நகர்ந்து விடுவார்.

csk 1

இந்நிலையில் அடுத்த வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தான் இருப்பார் என்பது போல் தெரிவித்திருக்கிறார் அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அவர் கூறுகையில்…

- Advertisement -

Dhoni

இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது வருத்தமளிக்கிறது. ஆனால் நாங்கள் செய்த சாதனையை எந்த அணியும் தற்போதுவரை செய்ததில்லை. ஒரு வருடம் தவறு நடந்துவிட்டால் அடுத்த வருடம் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று இல்லை. அடுத்த வருடமும் டோனி தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் இல்லாதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று தெரிவித்திருக்கிறார் காசி விஸ்வநாதன்.