கோப்பையுடன் சென்னைக்கு வருகிறார் தோனி ..! சென்னையில் கொண்டாட்டம் எப்பொழுது தெரியுமா..?

raina
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 11 சீசனில் 3 வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது தோனி தலைமையிலான சென்னை அணி. நேற்று(மே 27) மாலை மும்பை-வான்கடே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றியை தான் சென்னை ரசிகர்களுடன் தான் கொண்டாடுவேன் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
toss

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு இந்த ஐ.பி.எல் ஆண்டு களமிறங்கிய சென்னை அணியின் போட்டிகளை காண சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். அதற்கேற்றாற் போல முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. ஆனால் அதற்கு பின்னர் விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் என்று தமிழகத்தில் பல பிரச்சனை காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் புனே மைதானத்திற்கு மற்றும் செய்யப்பட்டது.

- Advertisement -

இதனால் சென்னையில் நடக்கும் போட்டிகளை காண ஆவலுடன் இருந்த ரசிகர்கள் வருத்ததிற்கு உள்ளாகினர். ரசிகர்களை போலவே கேப்டன் தோனியும் வருதடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை(மே 26 ) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தோனி ” இந்த ஆண்டு சொந்த மண்ணான சென்னையில் போட்டிகளை விளையாட முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது இருப்பினும் ஒரு போட்டியிளாவது சொந்த மண்ணில் விளையாடியது சந்தோசம் தான்” என்று கூறியிருந்தார்.
chennai

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி “இப்போதைக்கு எங்களுக்கு கொண்டாட்டங்கள் குறித்து எந்த திட்டமும் இல்லை. நாங்கள் சென்னைக்கு சென்று ரசிகர்களையும் எங்களுக்கு நெருக்கமானவர்களையும் சந்திக்க உள்ளோம், அத்துடன் மாலை ஒரு விடுதியில் தங்கி இந்த வெற்றியை கொண்டாடவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.இதனால் சென்னையில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.

Advertisement