நாங்கள் செய்த இந்த தவறு தான் பெங்களூரு அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – தோனி வேதனை

dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததது.

cskvsrcb

- Advertisement -

இதன்காரணமாக இறுதிகட்டத்தில் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களத்தில் இருந்ததால் சென்னை அணியின் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்தில் தோனியும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோகிறது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணியால் 160 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி இந்த தொடரில் சென்னை அணி பெறும் ஏழாவது தோல்வி என்பதனால் சென்னை அணியின் பிளே வாய்ப்பு முடிவுக்கு வந்தது என்றே கூறலாம். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வருத்தமான சில விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Hasaranga Moin Ali

இதுகுறித்து அவர் கூறுகையில் : பந்து வீச்சில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்திகரமாக இருந்தது. ஏனெனில் 170 ரன்கள் வரை விட்டுக் கொடுத்தால் நிச்சயம் சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம். மேலும் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது மைதானம் பேட்டிங்க்கு அதிக அளவு ஒத்துழைப்பு தரும் என்று எண்ணியிருந்தேன். அதன்படி எங்கள் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

ஆனால் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை நாங்கள் தொடர்ச்சியாக இழந்ததனால் அந்த சரிவில் இருந்து மீள முடியாமல் போனது. மிடில் ஆர்டர் இம்முறை சிறப்பான பாட்னர்ஷிப் கிடைக்காமல் போனதே இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன். மேலும் இந்த போட்டியில் சேசிங் செய்ய எவ்வளவு ரன்கள் தேவை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் சில ஷாட்டுகளை ஆடி இருக்கவேண்டும்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் பாதியிலேயே கேப்டன் பதவியில் ராஜினாமா அல்லது நீக்கப்பட்ட வீரர்களின் மொத்த பட்டியல்

ஆனால் எங்களால் அப்படி விளையாட முடியவில்லை. விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் அடுத்தடுத்து இழந்து வந்ததால் ரிஸ்க் எடுக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஒரு சில தவறுகளை சரி செய்தாலே நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் இந்த போட்டியில் எங்களால் அதனை சரிவர செய்ய முடியவில்லை என தோனி வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement