ஐ.பி.எல் 2021 : இந்த வருட ஐ.பி.எல் தொடரில் தரமான 3 சாதனைகளை செய்யவுள்ள தல தோனி – விவரம் இதோ

Dhoni

இந்த வருடம் 14வது சீசனுக்கான ஐபிஎல் தொடரானது நாளை மறுதினம் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற தொடரில் பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்போடு இந்த வருடம் ஐபிஎல்லில் களம் காண்கிறது.

Dhoni

இம்முறை அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ள சிஎஸ்கே நிர்வாகம் முன்கூட்டியே பயிற்சியையும் ஆரம்பித்து தற்போது விறுவிறுப்பை கூட்டி உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீசனில் தனிப்பட்ட முறையில் தோனி படைக்க உள்ள மூன்று சாதனைகளைப் பற்றி இந்த பதிவில் காண உள்ளோம்.

1) 5000 ரன்கள் :

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் தற்போது தோனி 4,632 ரன்களுடன் 8-வது இடத்தில் உள்ளார். மேலும் 368 ரன்களை சேர்ப்பதன் மூலம் 5000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் தோனி இணைவார். இதற்கு முன்னர் கோலி, ரெய்னா, ரோகித், தவான், வார்னர் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்து உள்ளனர்.

Dhoni 1

- Advertisement -

2) 250 சிக்சர்கள் :

இதுவரை ஐபிஎல் தொடர்களில் தோனி 216 சிக்சரை பறக்க விட்டுள்ளார். சிக்ஸர் அடிப்பதில் வல்லவர் ஆன தோனி மேலும் 34 சிக்ஸர் அடிப்பதன் மூலம் 250 சிக்ஸர்களை விளாசி மூன்றாவது ஐபிஎல் வீரர் என்ற சாதனை படைப்பார். இதற்கு முன்னர் கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் முதல் இரு இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni

3) 150 டிஸ்மிஸ்ஸல்ஸ் : ஐ.பி.எல் தொடரில் விக்கெட் கீப்பராக 150 டிஸ்மிஸ்ஸல்ஸ் செய்ய உள்ள வீரராக தோனி முதல் நபராக சாதனை படைக்க உள்ளார். இந்த இலக்கை எட்ட அவருக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.