இன்றைய போட்டியிலும் சி.எஸ்.கே அணியில் வாய்ப்பை இழக்கவுள்ள முன்னணி வீரர் – விவரம் இதோ

CSK-1

கடந்த 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 22 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பெங்களூரு அணி முதலிடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும் புள்ளிப் பட்டியலில் இருக்கின்றன. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான அணியும் மோதுகின்றன.

cskvssrh

இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல சென்னை அணியும் அதேபோன்று இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் டாப் 4க்குள் நுழையும் வாய்ப்பை பெற சன்ரைசர்ஸ் அணியும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்றைய சிஎஸ்கே போட்டியில் அணியில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியின்போது காயம் காரணமாக மொயின் அலி விளையாடவில்லை. தற்போது மொயின் அலி மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் அணிக்கு திரும்பினால் எந்த வீரர் வெளியேறுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

moeen ali 2

அந்த வகையில் தற்போது மொயின் அலி மீண்டும் அணிக்கு திரும்பும் போது டுவைன் பிராவோ அணியிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு ஆல்ரவுண்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி அணியில் நீடிப்பார் அதே போன்று சாம் கரண் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அதன் காரணமாக இந்த போட்டியிலும் தொடருவார்கள்.

- Advertisement -

tahir

அதன்காரணமாக தற்போது பிராவோ மற்றும் லுங்கி நெகிடி வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மொயின் அலி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது மற்றபடி அணியில் பெரியமாற்றம் ஏதும் இருக்காது இன்றைய போட்டிக்கான பிளேயிங் ஒன்று இதோ :

கெய்க்வாட், டூபிளசிஸ், மொய்ன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹீர்