சென்னை பவுலர்கள் இதை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல. அதுவே அவங்க தோல்விக்கு காரணம் – நிபுணர்கள் கருத்து

Pant

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக் கொண்டனர். முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் 188 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் அடித்தார். அவரைத் தொடர்ந்து மொயின் அலி 36, சாம் கரன் 34, ஜடேஜா 26 மற்றும் ராயுடு 23 ரன்கள் அடித்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த இலக்கை வெறும் 18.4 ஓவர்களில் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

raina

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 85 ரன்கள் குவித்தார். அவருடன் விளையாடிய இளம் வீரர் பிரித்வி ஷா 72 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். நேற்று சென்னை அணி டெல்லி அணியின் விக்கெட்டை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் தடுமாறியது. நேற்று விக்கெட்டை எடுப்பது குறித்த சிந்தனை இல்லாமல் ரன்களை எப்படி கட்டுப்படுத்துவது என்கிற சிந்தனையுடனே சென்னை அணி பந்து வீச்சாளர்கள் வந்து வீசியதாக தெரிகிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று ஆரம்பம் முதலே சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவருமே மிக மெதுவாக பந்து வீசினார்கள். அவர்கள் வீசிய இதுபோன்ற ஸ்லோ பவுன்சர், கட்டர், யார்க்கர் என அனைத்து பந்துகளும் ஆட்டத்தின் இறுதியில் வீசப்படும் பந்துகள் ஆகும். சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் விக்கட்டை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தாமல் ரன்களை எப்படி கட்டுப்படுத்துவது என்கிறார் கவனத்துடனே ஆடினார்கள். அதுவே அவர்களுக்கு எதிர்விளைவாக மாறியது.

சென்னை அணி பந்து வீச்சாளர்கள் வீசிய அனைத்து ஸ்லோ பந்துகளையும் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் ஆன தவான் மற்றும் ஷா மிக துல்லியமாக கேப்களில் பவுண்டரிகளாக அடித்தனர். மேலும் ஆட்டம் செல்ல செல்ல சில சிக்சர்களையும் அடித்து பறக்க விட்டனர்.

- Advertisement -

dhawan

நேற்று சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை எப்படி கட்டுப்படுத்துவது என்கிற சிந்தனையை தவிர்த்து விக்கெட்டை எடுக்க முயற்சி செய்திருந்தால் நிச்சயமாக டெல்லி அணியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். அதை அவர்கள் நேற்று செய்ய தவறி விட்டார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.