- Advertisement -
ஐ.பி.எல்

நமக்கு இருந்த பெரிய பிரச்சனையும் ஓவர்.. சர்பராஸ் கானை ஏலத்தில் எடுத்து சி.எஸ்.கே மாஸ்டர் ஸ்ட்ரோக் – விவரம் இதோ

ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2025 ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல்வேறு வீரர்களை விடுவித்திருந்தது. இதன் காரணமாக மிகப்பெரிய தொகையுடன் அவர்கள் இன்று அபுதாபி நகரில் நடைபெற்ற மினி ஏலத்தில் பங்கேற்று இருந்தனர்.

சர்பராஸ் கானை வாங்கி மிடில் ஆர்டரை பலப்படுத்திய சி.எஸ்.கே :

மிகப்பெரிய தொகையுடன் சி.எஸ்.கே அணி இந்த மினி ஏலத்தில் பங்கேற்று இருந்ததால் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை எடுக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டிருந்தது. இவ்வேளையில் நடைபெற்று வரும் இந்த மினி ஏலத்தில் முக்கிய வீரர்கள் சிலரை வாங்கிய சி.எஸ்.கே சர்ஃபராஸ் கானையும் தங்களது அணியில் வாங்கி அசத்தலான தேர்வை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக முதல் சுற்றில் ஏலம் போகாத அவரை அடிப்படை விலையான 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி பலரையும் வியக்க வைத்துள்ளது. ஏனெனில் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய வரும் சர்பராஸ் கான் கடந்த இரண்டு சீசங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத வேலையில் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவரை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர்.

இவ்வேளையில் அவரை அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்து சிஎஸ்கே அணி அசத்தியுள்ளது. ஏற்கனவே முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னா சர்பராஸ் கானை சி.எஸ்.கே அணி ஏலத்தில் எடுத்தால் நல்லது என்று கூறியிருந்த நிலையில் இன்று அவரை வாங்கி சிஎஸ்கே அணி தங்களது ஒரு பெரிய பிரச்சனையும் பூர்த்தி செய்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் உறுதியான ஒரு வீரர் இல்லை என்று பார்க்கப்பட்ட வேளையில் உள்ளூர் போட்டியில் பல ஆண்டுகால அனுபவமும், சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக இருக்கும் சர்பராஸ் கான் சி.எஸ்.கே அணியில் இணைந்திருப்பது மிடில் ஆர்டரை பலப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி கழட்டி விட்டாலும் மெகா சதானையுடன் கே.கே.ஆர் அணிக்கு சென்ற மதீஷா பதிரானா – விவரம் இதோ

அதோடு சிஎஸ்கே அணியில் அவர் இணைந்துள்ளதால் நிச்சயம் அவரது எதிர்காலத்திற்கும் இந்த வாய்ப்பு மிகப் பெரியளவில் கை கொடுக்கும் என்று பலரும் இந்த தேர்வை பாராட்டி வருகின்றனர். மிகத்திறமை வாய்ந்த வீரராக பார்க்கப்படும் சர்பராஸ் கான் சென்னை அணிக்கு வந்துள்ளதன் மூலம் மிடில் ஆர்டரில் சென்னை அணியின் குறை இந்த சீசனில் தீரும் என்று தெரிகிறது.

- Advertisement -