- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் ஏலம்: 12 நிமிடத்தில் 28.40 கோடிக்கு 2 இளம் பிளேயர்ஸ்.. திரும்பி பார்க்க வைத்த சிஎஸ்கே

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அதில் கேமரூன் கிரீனை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக முயற்சித்தது. இருப்பினும் சென்னை அணியிடம் அவரை விட்டுக் கொடுக்காத கொல்கத்தா அணி அவரை 25.20 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

அடுத்த சில நிமிடங்கள் அமைதி காத்த சென்னை அணி நிர்வாகம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைனை 2 கோடி என்ற குறைந்த தொகைக்கு வளைத்து போட்டது. அதைத் தொடர்ந்து நிறைய நட்சத்திர வீரர்கள் ஏலத்திற்கு வந்தும் சிஎஸ்கே அணி யாரையும் வாங்கவில்லை. ஆனால் திடீரென உத்திர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் எனும் ஆல் ரவுண்டரை சிஎஸ்கே அணி 14.20 கோடி என்று பெரிய தொகைக்கு வாங்கியது.

- Advertisement -

12 நிமிடத்தில் 28.40 கோடி:

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவர் கடந்த யூபி டி20 லீக் தொடரில் பேட்டிங்கில் 320 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 8 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் ஓரளவு நல்ல ஆல் ரவுண்டராக தெரிவதால் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை மாலை 4.56 மணிக்கு வாங்கிய சிஎஸ்கே அணி 5.08 மணிக்கு 19 வயது இளம் வீரர் கார்த்திக் சர்மாவை வாங்கி அனைவரையும் திரும்ப பார்க்க வைத்தது.

19 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 334 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதில் 28 சிக்ஸ் அடித்துள்ளார் என்பது அவரது சிறப்பம்சமாகும். உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக சிக்ஸர் அடிக்கும் திறமை கொண்ட அவரையும் சிஎஸ்கே அணி 14.20 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

- Advertisement -

திரும்பி பார்க்க வைத்த சென்னை:

இத்தனைக்கும் அந்த 2 வீரர்களுமே இதற்கு முன் சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத அவர்களை சிஎஸ்கே இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக 12 நிமிட இடைவெளியில் 28. 40 கோடிகள் செலவு செய்து அவர்களை சிஎஸ்கே வாங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம்: 25.20 கோடிக்கு வாங்கப்பட்ட க்ரீனுக்கு 18 கோடி மட்டுமே.. மீதி 7.20 யாருக்கு? புதிய விதிமுறை இதோ

கடந்த வருடம் மோசமாக விளையாடிய சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. தற்போது 44 வயதாகும் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வருங்காலத்தை முன்னிட்டு சிஎஸ்கே அணி தங்களை புதிதாக கட்டமைப்பதற்காகவே இப்படி இளம் வீரர்களை வாங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -