ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சி.எஸ்.கே அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா – வீரர்கள் பீதி

Hussey
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் சீசன் வீரர்களுக்கிடையே பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இந்த தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து வெளியிட்ட பிசிசிஐ அறிவிப்பில் இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி வீரர்களின் பாதுகாப்பு கருதியே இந்த தொடரை ஒத்திவைத்து உள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த தொடர் நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக கொல்கத்தா அணியை சேர்ந்தவர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சன் ரைசர்ஸ் அணியில் விருத்திமான் சஹா, டெல்லி அணியில் அமித் மிஸ்ராவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் சென்னை அணியில் பௌலிங் கோச் லட்சுமிபதி பாலாஜி மற்றும் முதன்மை அதிகாரி காசிவிசுவநாதன் மேலும் பேருந்து ஊழியர் ஒருவர் என மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

Balaji

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி வெளியிட்ட அறிக்கையில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கல் ஹஸிக்கு முதலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி ஆனது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு நடத்தப்பட்ட மற்றொரு டெஸ்டிலும் கொரோனா உறுதியானதால் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

hussey 1

அடுத்தடுத்து சிஎஸ்கே அணியில் உள்ள நாலு பேருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிஎஸ்கே அணி வீரர்களிடையே தற்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இவர்கள் நான்கு பேரும் மூலமாக இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா பரவும் என்பது உறுதி இல்லை. வரும் நாட்களில் சிலருக்கு இந்த தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் தற்போது சிஎஸ்கே வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement