தோனி கொடுத்த லிஸ்ட் படி தான் ஏலம் கேட்டிருக்கோம். சி.எஸ்.கே நிர்வாகம் வெளிப்படை – தோனியின் பிளான் இதுதானாம்

msdhoni
- Advertisement -

வரும் 2020ம் ஆண்டுக்கான 13 ஆவது ஐபிஎல் தொடரின் வீரர்களின் ஏலம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி 4 புதிய வீரர்களை வாங்கியது.
அதில் பியூஸ் சாவ்லாவை தவிர மற்ற வீரர்களை சென்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சாவ்லாவின் தேர்வு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றே தெரிகிறது.

Csk

- Advertisement -

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது. மேலும் கடந்த முறை கோப்பையை இறுதிப்போட்டி வரை சென்று தவறவிட்ட தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றிய ஆக வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்க உள்ளது.

கடந்த ஆண்டு ஆரம்பம் முதலே அமர்க்களமாக ஆடி வந்த சிஎஸ்கே இறுதிப்போட்டி வரை சென்று ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் இந்த முறை கோப்பையை வெல்லும் உறுதியோடு தோனி எழுதிக்கொடுத்த லிஸ்டில் உள்ள வீரர்களையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது என்று நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 2019ஆம் சென்னை அணிக்கு பெரும் பலவீனமாக இருந்தது பவுலிங் தான். தீபக் சாகரை தவிர யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை.

சாஹரை தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி கொடுத்தனர். அதனால் சென்னை அணி பவுலிங்கில் பலவீனம் கண்டது. மேலும் வீரர்களை மாற்றி பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை. ஆகவே இந்த முறை பவுலிங்கை பலப்படுத்த வேண்டும் என்ற புதிய முடிவில் தோனி தெளிவாக இருந்தார் மேலும் அணிக்கு தேவையான பணம் கையிருப்பு வேண்டும் என்பதால் அதற்கு முன்பாக சில வீரர்களின் சென்னை அணி விடுவித்தது.

இதனை தொடர்ந்து நடந்த ஏலத்தில் வாங்கப்பட்ட நான்கு பேரில் சாவ்லா மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் ஸ்பின்னர்கள். குரான் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் எனவே தற்போது சென்னை அணி போட்ட கணக்கின்படி பந்துவீச்சு பலப்படும் நினைக்கிறது. மேலும் தல தோனியின் கணக்கின் படி அவரது தலைமையில் இந்த வருடம் சிஎஸ்கே கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருப்பதும் மறுக்கப்படாத உண்மை.

Advertisement