- Advertisement -
உலக கிரிக்கெட்

விராட் கோலியின் ஹோட்டல் ரூம் விவகாரம். ஊழியருக்கு தண்டனை வழங்கி – மன்னிப்பும் கேட்டு வெளியிட்ட அறிக்கை

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியானது மூன்று வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெர்த் நகரில் நடைபெற்ற போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெர்த் நகரில் உள்ள கிரவுண்ட் பெர்த் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

அப்போது அந்த ஹோட்டலில் விராட் கோலியின் அறையில் நுழைந்த ஒரு ஹோட்டல் ஊழியர் அவரது அனுமதியின்றி அவரது அறையில் உள்ள அனைத்து பொருட்களையும் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். உடனடியாக இந்த வீடியோ விராட் கோலியின் கவனத்திற்கு வரவே அதனால் கோபமடைந்த விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ஊழியரை கடுமையாக விமர்சித்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரரை நேரில் பார்க்க வேண்டும் என்றும் அதனால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்பதும் எனக்கு தெரியும்.

- Advertisement -

அவர்களின் அந்த எண்ணங்களை நான் மதிக்கிறேன். ஆனால் என்னுடைய அறையில் என்னுடைய அனுமதி இன்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ என பல விடயங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்படுவது என்னை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. அதோடு என்னுடைய தனிப்பட்ட சுதந்திரமும் இந்த விடயத்தினால் பறிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று விராட் கோலி கடுமையான கருத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வெளியிட்டிருந்தார்.

மேலும் ஹோட்டலில் தங்கும் போது கூட எனக்கு தனிப்பட்ட முறையில் சுதந்திரம் இல்லை என்றால் எனக்கு வேறு எங்கு சுதந்திரம் கிடைக்கும் என்று தனது அதிருப்தியை அந்த பதிவின் மூலம் அவர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் விராட் கோலியின் இந்த ஹோட்டல் ரூம் விவகாரத்தில் தற்போது கிரவுண்ட் பெர்த் ஹோட்டல் நிர்வாகம் முக்கிய நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளது.

- Advertisement -

அதன்படி விராட் கோலியின் ஹோட்டல் அறைக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்து அந்த வீடியோவை எடுத்த ஹோட்டல் ஊழியரை பணிநீக்கம் செய்துள்ள ஹோட்டல் நிர்வாகம் சோசியல் மீடியாவில் இருந்து அந்த வீடியோவையும் டெலிட் செய்தது. மேலும் இது தொடர்பாக விசாரணையையும் துவங்கி உள்ளதாகவும் தெரிவித்துளர்த்து.

இதையும் படிங்க : விராட் கோலி சொன்ன அந்த பதிலை வேறு யாரும் சொல்லியிருக்க மாட்டாங்க – இயான் சேப்பல் நெகிழ்ச்சி

அதுமட்டுமின்றி இந்திய வீரரான விராட் கோலிக்கு ஏற்பட்ட இந்த மோசமான சம்பவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் பகிரங்கமாக தங்களது மன்னிப்பையும் கேட்டு ஹோட்டல் நிர்வாகம் முறைப்படி அறிக்கை ஒன்றினை விராட் கோலியிடம் வழங்கியுள்ளது. இது தொடர்பான செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by