விராட் கோலி சொன்ன அந்த பதிலை வேறு யாரும் சொல்லியிருக்க மாட்டாங்க – இயான் சேப்பல் நெகிழ்ச்சி

Ian-Chapell-and-Virat-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரமான விராட் கோலி ஆசியக் கோப்பை தொடரிலிருந்தே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆசியக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசிய விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் நான்கு ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் அரைசதம் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்று வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வேண்டுமெனில் விராட் கோலி பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் நிச்சயம் அவர் தொடர் நாயகனாக மாறுவார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் இயான் சேப்பல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்தபோது விராட் கோலியுடன் அவர் எடுத்த பழைய பேட்டி ஒன்றினை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அந்த பேட்டி குறித்து அவர் தெரிவித்துள்ள சில நெகிழ்ச்சியான கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சேப்பல் கூறியதாவது : கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் விராட் கோலியிடம் பேட்டி எடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த பேட்டியில் முதலில் நான் அவரிடம் கேட்ட கேள்வி யாதெனில் :

kohli 2

உங்களால் மைதானத்தில் பல பக்கங்களிலும் ஷாட்டுகளை அடிக்க முடியும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் நீங்கள் அது போன்ற வித்தியாசமான ஷாட்டுகளை ஏன் விளையாடுவதில்லை? டி20 கிரிக்கெட்டில் நீங்களும் 360 டிகிரி ஷாட்டுகளை விளையாடலாமே அதனை ஏன் விளையாட தயங்குகிறார்கள்? என்று அவரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு விராட் கோலி அளித்த பதிலாவது : நான் டி20 போட்டிகளில் வித்தியாசமான ஷாட்டுகளை நிச்சயம் விளையாட முடியும். ஆனால் அப்படி நான் டி20 போட்டிகளுக்காக எனது பேட்டிங் டெக்னிக்கை மாற்றினால் அது எனது டெஸ்ட் பேட்டிங்கை வீணாக்கும்.

- Advertisement -

எப்போதுமே நான் டெஸ்ட் போட்டிகளை விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆகையால் டி20 போட்டிகளில் வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடுவதை தவிர்த்து என்னுடைய இயல்பான பேட்டிங் டெக்னிக்கை வைத்து ரன்களை குவிக்க விரும்புகிறேன். அந்த வகையில் என்னிடம் இருக்கும் சரியான கிரிக்கெட்டிங் ஷாட்டுகளே டி20 கிரிக்கெட்டில் ரன் குவிக்க போதுமானதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று விராட் கோலி பதில் அளித்தார்.

இதையும் படிங்க : முற்றும் விராட் கோலியின் “Fake Fielding” விவகாரம். ஐ.சி.சி கூறும் ரூல்ஸ் என்ன? – அம்பயரின் தவறா?

இவ்வளவு புரிதலோடு கிரிக்கெட் டெக்னிக்கை எந்த ஒரு இடத்திலும் சரியவிடாமல் மிகச்சிறப்பாக கையாள்வதாலே டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று போட்டிகளுமே விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். அவர் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருப்பதற்கும் அவரிடம் இருக்கும் இந்த புரிதல் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டேன். அதனைத் தொடர்ந்தும் நாங்கள் நிறைய கிரிக்கெட்டை பற்றிய விடையங்களை பேசிக்கொண்டோம். நான் எடுத்த பேட்டியிலேயே அந்த ஒரு பேட்டியை தான் சிறப்பான ஒன்று என்று இன்றளவும் நினைப்பதாக இயான் சேப்பல் கூறியது குறிப்பிடத்தக்கது..

Advertisement