ஒலிம்பிக்கில் இணையவுள்ள கிரிக்கெட். போட்டிகள் எப்படி நடைபெறும் தெரியுமா ? – விவரம் இதோ

icc
- Advertisement -

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியை இணைக்க எம் சி சி இன் தலைவர் மைக் கேட்டிங் ஐசிசி கோரிக்கை விடுத்திருந்தார். ஐசிசி அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பதற்கான விவகாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தது.

fans

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவும் மைக் கேட்டிங் கூறினார். மேலும் உலக கிரிக்கெட் அமைப்புகளில் மிகப்பெரிய அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் தேசிய ஊக்கமருந்து தடை அமைப்பின் விதிமுறைக்குள் வந்தது.

- Advertisement -

ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு போட்டி இணைக்கப்பட வேண்டும் என்றால் அந்த விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயம். இந்நிலையில் இந்த ஊக்க மருந்து சோதனை பிசிசிஐ வரவேற்ற நிலையில் கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற இந்த விடயம் முக்கிய காரணமாக அமைந்தது.

மேலும் ஒலிம்பிக் என்பது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா என்பதால் கிரிக்கெட் போட்டிகள் எவ்வாறு அட்டவணை படுத்துவார்கள், எவ்வாறு போட்டிகள் நடைபெறும், எப்படி முடிவுகள் கிடைக்கும் என்பது பற்றி ஆலோசனை குழு விவாதித்து வருவதாகவும் அதன்படி போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்றும் ஒலிம்பிக் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement