தோனி காலங்களில் வாய்ப்பு பெறாத, 5 அதிர்ஷ்டமில்லாத இந்திய வீரர்கள்..! – இதில் சென்னை வீரர் யார் தெரியுமா..?

robin
- Advertisement -

தோனி தலைமையில் ஆடுவது என்பதெல்லாம் இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய கனவு தான். கிரிக்கெட்டில் தகுதியான வீரர்கள் தங்களது நேரம் சரியில்லாத காரணத்தால் இந்திய அணியில் இடம் பெரும் வாய்ப்பை தவற விட்டிருக்கிறார்கள். ஒரு சில வீரர்கள் அவர்கள் ஆடிய உள்நாட்டு போட்டிகளில் சிறப்பான சாதனைகளை வைத்திருந்தாலும் அவர்களின் துரதிர்ஷ்டத்தால் தோனி தலைமையில் ஆட போதுமான வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது.

dawal

- Advertisement -

தாவால் குல்கர்னி பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் என்றாலும் சரி, ஐபிஎல் தொடராக இருந்தாலும் சரி இரண்டு தொடரிலிலுமே சிறப்பாக விளையாடி வந்தவர். இதுவரை இந்திய ஏ அணியில் விளையாடி 160 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2014 ஆம் ஆண்டு இந்தியா – இங்கிலாந்து போட்டியில் , இந்திய அணியில் தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் களமிறங்கினார். பின்னர் 2015 , 2016 போன்ற ஆண்டுகளில் இந்தியா விளையாடிய ஒரு சில தொடர்ளில் விளையாடியுள்ளார். இதுவரை 19 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை மட்டும் எடுத்துள்ளார்.

ராபின் உத்தப்பா இந்திய அணியின் பயிற்சிளராக கிரேக் சாப்பெல் இருந்த காலகட்டத்தில் இந்திய அணியின் துடிப்பான ஆட்டக்காரராக இருந்தவர். பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்த உத்தப்பா, இதுவரை 46 ஒரு நாள் போட்டி மற்றும் 13 டி20 தொடர்களில் விளையாடி இருக்கிறார். ஆனால் தோனி கேப்டனாக தலைமை ஏற்ற பிறகு இவர் அணியில் இடம்பெறுவது அரிதாகிவிட்டது.

yadhaகேதர் ஜாதவ் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் போட்டியில் வேறும் 20 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜிம்பாபேவிற்கு எதிரான ஆட்டத்தில் முதல் 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், 3 வது போட்டியில் 105 ரன்களை குவித்து அசத்தினார். 2017 இல் 32 வயதை போர்த்தியடைந்த இவரால் தொடர்ந்து இந்திய அணியில் நிலைத்து நிற்க முடியவில்லை.

மனோஜ் திவாரி பர்ஸ்ட் க்ளாஸ் தொடர்களில் விளைய்டியுள்ள இவர், 7020 ரன்களை பெற்று 52 பேட்டிங் சராசரியை வைத்துள்ள ஒரு சிறப்பான ஆட்டக்காரர். 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் களமிறங்கிய இவர், அந்த தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. பின்னர் 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இறுதியாக 2015 ஆம் ஆண்டு ஜிம்பாபேவிற்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு இவரை தோனி தலைமையில் காண முடியவில்லை.

manoj-tiwary

நமன் ஓஜா சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனா ன இவர், இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை சதத்தையும் அடித்துள்ளார். மேலும், இதுவரை 120 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடி 2606 ரன்களை குவித்துள்ளார். இவ்வளவு சிறப்பான பதிவுகள் இருந்தும் இவருக்கு தோனி தலைமையில் வாய்ப்பு நீடிக்கவில்லை.

Advertisement