முக்கியமான அந்த தொடர்களில் ஜெயிக்கனும்னா ஹார்டிக் பாண்டியா தேவை – கிரேக் மேக்மில்லன் கருத்து

McMillan and Pandya
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. சவால் வாய்ந்த இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரினை இந்திய அணி சமன் செய்தது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு ஹார்டிக் பாண்டியா தேவை : கிரேக் மேக்மில்லன்

ஏனெனில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப்போகிறது? என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதனை சமாளித்து இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என இரு தரப்பினும் மிகச் சிறப்பாக செயல்பட்ட வேளையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது குறையாக பார்க்கப்பட்டது. ஏனெனில் நிதீஷ் ரெட்டி இந்த தொடரில் இடம் பெற்றிருந்தாலும் அவரால் காயம் காரணமாக நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை.

அதேபோன்று ஷர்துல் தாகூரும் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு ஹார்திக் பாண்டியா அவசியம் தேவை என்றும் அவரைப் போன்ற வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருந்தால் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளங்களிலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என நியூசிலாந்தின் முன்னாள் வீரரான கிரேக் மேக்மில்லன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆசிய கண்டத்தில் இந்திய அணி விளையாடும் போது ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் போன்ற சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் நிச்சயம் தேவை. ஆனால் ஆசிய கண்டத்தை தாண்டி வெளியில் நடக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அவசியம் தேவை.

இதையும் படிங்க : இப்படி ஒரு திறமையான வீரர் வழி தவறி போவதை பாக்க கஷ்டமா இருக்கு – ரோஹித் சர்மாவின் கோச் வேதனை

அதிலும் குறிப்பாக ஹார்டிக் பாண்டியா போன்ற வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இருந்தால் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் ஒரு வீரரும் கிடைப்பார். எனவே பென் ஸ்டோக்ஸ் போன்று அந்த இரண்டு வேளையிலும் கச்சிதமாக பொருந்தும் ஹார்டிக் பாண்டியா வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களுக்கு அவசியம் தேவை என கிரேக் மேக்மில்லன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement