அவரு எப்படி போட்டாலும் அடிக்குறாரு. அவரை தடுத்து நிறுத்துவது ரொம்ப கஷ்டம் – ஜிம்பாப்வே கேப்டன் கருத்து

Craig-Ervine
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலக கோப்பையில் சிறிய அணிகளாக பார்க்கப்பட்ட பல அணிகள் பெரிய பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று அசத்தியது. அந்த வகையில் ஜிம்பாப்வே அணியும் இந்த தொடரில் பெரிய அணிகள் சிலவற்றை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 12 சுற்றிலும் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை கூட ஜிம்பாப்வே அணி வீழ்த்தி அசத்தியிருந்தது. இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடியது.

IND-vs-ZIM

ஆனாலும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியிடம் 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக தாங்கள் பெற்ற இந்த தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரெய்க் எர்வின் பேசுகையில் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் எங்களது இரண்டு திட்டங்களை மாற்றி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சூரியகுமார் யாதவ் இந்த போட்டியில் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக விளையாடிவிட்டார்.

Suryakumar YAdav

எங்களது பவுலர்கள் எங்கு பந்து வீசினாலும் அவர் அதனை சிறப்பாக கையாண்டு பந்துகளை தூக்கி அடிக்கிறார். அதிலும் குறிப்பாக மைதானத்தின் பின்புறத்தை அவர் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன். எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் வைட் யார்க்கர் பந்துகளை போட்டாலும் அதையும் சரியாக கணித்து பின்புறம் தூக்கி அடிக்கிறார். அவர் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளே வந்ததும் தான் போட்டி முற்றிலுமாக மாறியது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இருந்தாலும் இந்தியா போன்ற பெரிய அணிக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சி. நாங்கள் எங்களுடைய பேட்டிங்கில் சில போட்டிகளில் பாசிட்டிவான விடயங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். கடைசி இரண்டு போட்டிகளாகவே நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறோம். எங்களை பொறுத்தவரை தற்போது ஒரு சிறிய கூட்டுக்குள் அடங்காமல் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : மெல்போர்ன் மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரோஹித்தின் குட்டி ரசிகர். 6.5 லட்சம் அபராதம் – எதற்கு தெரியுமா?

அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் நிறைய போட்டிகள் எங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுக் கொடுத்தது. அதேபோன்று நல்ல அனுபவத்தையும் கொடுத்தது. கடைசி சில போட்டிகளின் முடிவுகள் எங்களது திட்டங்கள் படி அமையவில்லை என்றாலும் சூப்பர் 12 சுற்று வரை நாங்கள் முன்னேறியதில் மகிழ்ச்சி. இந்த தொடர் முழுவதுமே எங்களுடைய பீல்டிங் மற்றும் கேட்சிங் என அனைத்துமே சிறப்பாக இருந்தது என ஜிம்பாப்வே கேப்டன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement