ஐபில் 2018: RCB போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம் செய்கிறது – காரணம் இதுதான் ?

virat
- Advertisement -

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் சமீபத்தில் வெளியாகின. மே 12 தேதி வாக்குப்பதிவும் 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தது.

kohli

- Advertisement -

இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கர்நாடகாவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மொத்தம் 7போட்டிகளில் விளையாடவுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட மே12ம் தேதி அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கான போட்டி நடைபெற இருந்தது.

தற்போது அதே தேதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் மே12ம் தேதி பெங்களூருவில் நடைபெறவிருந்த போட்டி டெல்லி பொரோஷா கோட்லா மைதானத்திற்கும், ஏப்ரல் 21ம் தேதி டெல்லியில் நடைபெறவிருந்த பெங்களூருக்கு எதிரான போட்டிகள் மே12ல் டெல்லிக்கும் மாற்றப்பட்டுள்ளன.

rcb

இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement