நாடு வேறுபட்டு இருந்தாலும் தோனியின் இந்த செயல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது – காட்ரெல்

Advertisement

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி ராணுவத்தில் கௌரவ லெஃப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். அவர் தற்போது காஷ்மீரில் இந்திய இராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெற அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை அவர் விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார்.

Dhoni

இதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்லும் அணியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட தோனி அடுத்த இரண்டு மாதத்திற்கு இந்திய இராணுவத்துடன் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். தோனியின் இந்த ராணுவ பயிற்சி குறித்து பல முன்னாள் வீரர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான காட்ரெல் தோனி இராணுவப் பயிற்சி பெறுவதை புகழ்ந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டதாவது : இந்த மனிதர் களத்தில் நின்றால் உத்வேகம். இவர் சிறந்த தேசபக்தர் கிரிக்கெட்டுக்கு அப்பால் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் என்று 2011 ஆம் ஆண்டு டோனி ராணுவத்தில் பதவியேற்ற வீடியோவை பகிர்ந்து என்னை போல நீங்களும் மகிழுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement