- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் – நியூசி வீரர் கோரி ஆண்டர்சன் விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஆட்டத்தில் எப்படி இருப்பார்கள் என்று நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன் இன்ஸ்டாகிராம் நேரலை ஒன்றில் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன். இவர் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் இவருக்கு பல ஒப்பந்தங்கள் கிடைத்தது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தலைமையிலும், துணை கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையிலும் இவர் ஆடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடல் நடத்திய கோரி ஆண்டர்சன். இருவரின் தலைமை பண்பு குறித்தும் பேசியுள்ளார். இருவரின் திறமையைப் பற்றியும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இருவருமே மிகச் சிறந்த தலைமை பண்பு கொண்டவர்கள். இதில் ரோஹித் சர்மா சற்று பின்னடைவு அடைகிறார். தான் வெற்றி பெற வேண்டும் என்று உணர்ச்சி வசப்படுகிறார். அவர் செய்வதெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அதை மறைக்க விரும்புகிறார்.அதேநேரத்தில் விராட்கோலி தன் உணர்ச்சிகளை எல்லாம் பொங்கி வெளியே காட்டுகிறார்.

ஆனால், இருவருமே அணியின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் இருவருமே நல்ல திறமைசாலிகள். யுக்திகளைய வகுப்பதில் கில்லாடிகள். அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு நன்றாக தெரியும். எப்படி வெற்றி பெறுவது எனவும் நன்றாக தெரியும். இதன் காரணமாகத்தான் இந்திய அணியின் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது.

ரோஹித் சர்மா அடித்து ஆட தொங்க விட்டால் அவரை கட்டுப்படுத்த முடியாது. அவர் ஆடும் ஆட்டம் கிரிக்கெட்டில் ஆடும் மிகச் சிறந்த வீரர் எளிதாக ஆடுவதைப்போல் இருக்கும் என்று கூறியுள்ளார் கோரி ஆண்டர்சன்.

- Advertisement -
Published by
Tags: Corey