29 வயதிலேயே திடீர் ஓய்வினை அறிவித்த நியூசிலாந்து அணியின் அதிரடி மன்னன் – ரசிகர்கள் அதிர்ச்சி

Corey
- Advertisement -

2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தின் போது ஒரு இளம் வீரர் 36 பந்துகளில் சதம் அடித்து உலக கிரிக்கெட்டை தன்பக்கம் திருப்பி சாதனை நிகழ்த்தினார். அந்த வீரர் வேறுயாருமில்லை நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கோரி ஆண்டர்சன் தான். சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அதிரடி ஜாம்பவான்கள் மட்டுமே குறைந்த பந்துகளில் சதத்தை அடித்து கொண்டிருக்க எந்தவித பயம், பதட்டம் இன்றி 36 பந்துகளில் சதம் அடித்து அப்போது ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார் கோரி ஆண்டர்சன்.

Corey 1

- Advertisement -

ஆனால் அதன்பிறகு அவரது கிரிக்கெட் கேரியர் நியூசிலாந்தில் சிறப்பாக அமையவில்லை. கடைசியாக 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் 49 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ள அவர் ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இரண்டு ஆண்டுகளாக அவருக்கு நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ப்தி அவரிடம் இருந்துகொண்டே இருந்தது.

மேலும் தற்போது அமெரிக்காவில் நடைபெற உள்ள எம்எல்சி டி20 போட்டியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வந்ததும் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் மொத்தம் மூன்று வருட ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார். இதனால் 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் இனி வருங்காலத்தில் அமெரிக்கா அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் வெளிப்படையாக தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Corey 3

இதுகுறித்து அவர் பேசுகையில் : நான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல. நான் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் மேரி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் எனக்காக அவர் நியூசிலாந்திற்கு வந்து புதிய கலாச்சாரத்தில் வாழ்ந்து நிறைய தியாகம் செய்துள்ளார். எனவே என்னுடைய இந்த முடிவில் அவரின் பங்கும் அதிகம் உள்ளது. நான் அணிக்காக விளையாடிய போதும் காயத்தால் அவதிப்பட்ட போதும் எனக்கு துணை நின்று நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.

- Advertisement -

எனவே புதிய வாய்ப்பு வருகின்ற பொழுது அமெரிக்காவில் வாழ்வது என முடிவெடுத்தேன். அதனால் நியூசிலாந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து உள்ளேன் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென அறிவித்த அவரின் இந்த அறிவிப்பால் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Corey 2

அதுமட்டுமின்றி சிறப்பான ஒரு ஆல்-ரவுண்டராக சர்வதேச போட்டியில் திகழ்ந்த அவர் இனி நியூசிலாந்து அணிக்காக விளையாட மாட்டார் என்பது அவர் அவர்களுக்கு இழப்புதான் மேலும் அமெரிக்க கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் நிலையில் இவர் அமெரிக்கா அணிக்காக விளையாடி இருப்பது அந்த அணிக்கும் பலத்தை சேர்க்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement