அவரு மறுபடியும் பார்முக்கு வந்துட்டாரு. இனி அந்த இந்திய வீரரை நிப்பாட்டுறது கஷ்டம் – பால் காலிங்வுட் புகழாரம்

Paul-Collingwood
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் தொடரானது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி பார்மிற்கு திரும்பியுள்ளதால் ஒருநாள் போட்டிகளில் அவரது செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kohli 1

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பால் காலிங்வுட் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்தும் தற்போது அவர் விளையாடி வரும் விதம் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் : விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார்.

- Advertisement -

அவரது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது அவர் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி நல்ல நிலையில் உள்ளார். விராட் கோலி தற்போது விளையாடி வரும் விதம் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். நிச்சயம் எந்த ஒரு சூழ்நிலையிலும் அற்புதமாக விளையாடக்கூடிய அபாரமான பேட்ஸ்மன் அவர்.

Kohli

மீண்டும் அவர் தனது பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். எனவே அவர் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் இன்னும் ஆக்ரோஷமாக விளையாட வாய்ப்புள்ளதாக காலிங்வுட் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரிஷப் பண்டும் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் அவரும் விளையாடும் விதம் அருமையாக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் துரதிஷ்டவசமாக அவர் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். நிச்சயம் அவர் அந்த காயத்திலிருந்து மீண்டும் விரைவாக களத்திற்கு திரும்புவார் என்று நம்புகிறேன் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் குவித்த விராட் கோலி 3 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28-ஆவது சதத்தையும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 75-வது சதத்தையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கேரியரில் முதல் முறையா அந்த சாதனைக்காக விளையாடி சச்சினிடம் சவாலில் தோத்துட்டேன் – 2009 பின்னணியை பகிர்ந்த சேவாக்

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் விராட் கோலி 110 சதங்களை அடித்து சச்சின் சாதனை முறியடிப்பார் என்று கூறியிருந்த வேளையில் தற்போது காலிங்வுட்டும் விராட் கோலியை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement