கேரியரில் முதல் முறையா அந்த சாதனைக்காக விளையாடி சச்சினிடம் சவாலில் தோத்துட்டேன் – 2009 பின்னணியை பகிர்ந்த சேவாக்

Sehwag Sachin
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது அதிரடி சரவெடியான பேட்டிங்கால் உலகம் முழுவதும் உள்ள முன்னணி பந்து வீச்சாளர்களை தெறிக்க விட்டு பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அந்த காலத்திலேயே டி20 போல அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை குவித்த அவர் இந்திய கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை விட அதிரடி எனும் வார்த்தைக்கு உண்மையான இலக்கணத்தை கற்பித்தவராக போற்றப்படுகிறார். பொதுவாக அவரிடம் இருக்கும் 2 ஸ்பெஷலான திறமைகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

Sehwag

- Advertisement -

ஒன்று எந்த வகையான போட்டியாக இருந்தாலும் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விட்டு தனது அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுப்பதில் சேவாக் மிகவும் புகழ்பெற்றவர். மற்றொன்று 90 ரன்களில் இருக்கும் போது சிங்கிள், டபுள் எடுத்து எப்படியாவது சதத்தை அடிக்க வேண்டுமென்ற சுயநல எண்ணத்துடன் விளையாடி அதில் பதற்றமடைந்து அவுட்டாகும் பல வீரர்களுக்கு மத்தியில் 90, 190, 290 என எந்த வகையான சதமாக இருந்தாலும் அதை பெரும்பாலும் பயமின்றி பதற்றமடையாமல் பவுண்டரி அல்லது சிக்ஸரை பறக்க விட்டு தொடுவதில் அவருக்கு நிகர் இந்த உலகில் வேறு யாரும் கிடையாது என்று சொல்லலாம்.

சச்சினிடம் சவால்:
அதன் காரணத்தாலேயே 309, 319 என டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரராகவும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராகவும் சேவாக் இன்றும் ஜொலித்து வருகிறார். ஆனால் கடந்த 2009ஆம் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வழக்கம் போல அதிரடியாக விளையாடி வெறும் 254 பந்துகளிலேயே 293 ரன்கள் குவித்த வீரர் சேவாக் 300 ரன்களை தொட்டு உலகிலேயே 3 முச்சதங்கள் அடித்த ஒரே வீரராக உலக மகா சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

sachin 2

இருப்பினும் பொதுவாகவே சதத்துக்காகவும் சாதனைக்காகவும் விளையாடாத தாம் அந்த தருணத்தில் முச்சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடியதால் 293 ரன்களில் முத்தையா முரளிதரனிடம் அவுட்டானதாக வீரேந்திர சேவாக் தமக்கு தாமே ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதன் காரணமாக அப்போட்டியில் முச்சதம் அடித்தால் ஒன்றை செய்ய வேண்டும் என்று சச்சினிடம் விடுத்த சவாலிலும் தோற்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் எனது கேரியரில் சாதனைகளுக்காக விளையாடியதில்லை. நான் எப்போதும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து விளையாடவில்லை. ஆனால் ஒன்றின் மீது மட்டும் நான் இலக்கு வைத்து விளையாடி தோல்வியை சந்தித்தேன். அது தான் என்னுடைய 3வது முச்சதமாகும். அதனால் அப்போட்டியில் நான் 293 ரன்களில் அவுட்டானேன். இதைப் பற்றி நான் எப்போதும் பேசியதில்லை. இது யாரிடமும் சொல்லக்கூடாது என்றிருந்தேன். இருப்பினும் அந்தப் போட்டிக்கு முன்பாக சச்சினிடம் “ஒருவேளை இப்போட்டியில் 3வது முச்சதத்தை நான் அடித்தால் நீங்கள் எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும்” என்று கூறினேன். அதற்கு அவர் “என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்”

sehwag

“இருப்பினும் அதை இப்போதே சொன்னால் எப்படி அதில் சுவாரசியம் இருக்கும் என்று நான் அவருக்கு பதிலளித்தேன். எனவே அவர் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் நான் சொன்னது போல் முச்சதம் அடிக்க முடியவில்லை என்பதால் அந்த சவாலை பற்றியும் வேலையைப் பற்றியும் மீண்டும் சச்சினிடம் பேசவில்லை. அது என்னுடைய நிறைவேறாத ஆசையாகவே சென்றது. எனவே இப்போதும் அன்றைய நாளில் சச்சினிடம் என்ன வேலையை சவாலாக வாங்க நினைத்தேன் என்று சொல்வது நல்லதல்ல” எனக் கூறினார்.

இதையும் படிங்க:யாருங்க அதை பார்ப்பா, ஐபிஎல் விட அந்த வெளிநாட்டு தொடர் தான் சிறந்த டி20 தொடர் – பாபர் அசாம் பேட்டி

அப்படி அந்தப் போட்டியில் 7 ரன்களில் உலகிலேயே 3 முச்சதங்களை அடித்த முதல் வீரர் என்ற டான் பிராட்மேனால் படைக்க முடியாத சாதனையை சேவாக் தவற விட்டது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது.

Advertisement