காலின் டி கிரான்ட்ஹோம் முல்லட் இஸ் நோ மோர் – நியூசி வாரிய அறிவிப்பால் ஷாக் ஆகிய ரசிகர்கள்

Grandhome

நியூசிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான காலின் டி கிரான்ட்ஹோம் கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணிக்காக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 42 ஒருநாள் போட்டிகள் மற்றும் 41 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் 35 வயதான அவர் தனது நீளமான ஹேர் ஸ்டைல் மூலம் சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

grandhomme 1

அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச தொடர் வரை தனது நீளமான முடியுடன் இருந்த அவர் தற்போது அதனை நீக்கி மொட்டை அடித்துள்ளார். இதனை தெரிவிக்கும் வகையில் நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் : “தி ஃபேமஸ் காலின் டி கிரான்ட்ஹோம் முல்லட் இஸ் நோ மோர்” என்று சோகமான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது.

- Advertisement -

இதனை தவறாக புரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து தங்களது வருத்தங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வந்தனர். இதில் உண்மை யாதெனில் முல்லட் என்பது அவரது ஹேர் ஸ்டைல் உடைய பெயர் ஆகும். இதனை தவறாக புரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்று தங்களது வருத்தங்களை தெரிவித்திருந்தனர்.

ஆனால் இதில் உண்மையான விடயம் யாதெனில் அவருடைய முல்லட் ஹேர் ஸ்டைல் இனிமேல் கிடையாது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் பதிவிட்ட இந்த தகவல் தற்போது சற்று தவறான தகவலாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

grandhomme

பலரும் கிரான்ட்ஹோம் இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்க அவரது நீளமான தலைமுடியை வெட்டி விட்டு அவர் தற்போது மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement