ஆஸ்திரேலிய அணியின் 3 வித கிரிக்கெட்டிற்கும் இவரை கேப்டனாக நியமியுங்கள் – கிளார்க் பேட்டி

Clarke

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளை எடுத்துக்கொண்டால் அனைத்து விதமான போட்டிகளுக்கும் ஒரே கேப்டனை வைப்பதுதான் வாடிக்கையாக இருந்துவருகிறது. பல ஆண்டுகளாக ஒவ்வொரு கேப்டன் மாறும் போதும் அந்த ஒரு கேப்டன் தான் டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்திற்கும் கேப்டனாக இருப்பார்.
ஆனால் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய கலாச்சாரம் கொண்ட நாடுகளில் வேலை பளுவைக் குறைப்பதற்காக ஒவ்வொரு வகையான போட்டிக்கும் தனித்தனியாக கேப்டன்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

paine 2

ஆஸ்திரேலியாவிலும் இப்படித்தான் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பந்தை சேதப்படுத்தி எதிரணியை ஏமாற்றி விளையாடியதற்காக அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார். அப்போது அவரின் தடை காரணமாக ஆரோன் பின்ச் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் டிம் பெய்ன் டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.

டிம் பெய்ன் தலைமையில்தான் 2018ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. தற்போது 2020ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வருகின்றன.

Paine

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு 3 விதமான போட்டிகளுக்கும் பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.‌
இதுகுறித்து அவர் கூறுகையில்…. பேட் கம்மின்ஸ் ஒரு கேப்டனாக இருப்பதற்கான தகுதிகளுடன் இருக்கிறார். அவரால் அணிக்கு எந்தவிதமான பங்களிப்பையும் எப்போதும் செய்ய முடியும். தேவைப்படும் போதெல்லாம் தேவையானவற்றை செய்து கொடுக்க முடியும்.

- Advertisement -

டிம் பெய்ன் நேரம் முடிந்து விட்டது. இளம் வீரருக்கு வாய்ப்பளித்து ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய வீரர்களின் உதவியுடன் அணியை வழிநடத்த வேண்டும். கேப்டன் பொறுப்பை பேட் கம்மின்ஸ்-இடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மைக்கேல் கிளார்க்.