போட்டியில் விளையாட மைதானத்திற்கு நுழையும் முன்னர் இவர் புகைபிடித்து விட்டு தான் வருவார் – கிளார்க் ஓபன்டாக்

Clarke

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க், தான் ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோது, தன்னுடன் விளையாடிய சக வீரரான ஷேன் வார்னேவைப் பற்றி ஒரு உண்மையை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் குறிப்பாக கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக ஷேன் வார்னேவின் நடவடிக்கையைப் பற்றி பேசியுள்ளார். அவரைப் பற்றி மைக்கேல் கிளார்க் கூறுகையில், ஷேன் வார்னே களத்திற்கு வருவதற்கு முன் புகைப் பிடித்துவிட்டுத்தான் வருவார்.

clarke

ஆனால் அதை அவர் எப்போதுமே மறைக்க வேண்டும் என்று தான் நினைப்பார். களத்திற்குள் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டால் அதனை தூரமாக எறிந்துவிட்டு வந்துவிடுவார். களத்திற்குள் வந்ததும், அணிக்காக அவர் என்ன செய்ய வேண்டுமோ அதனை மிகச் சிறப்பாக செய்து முடித்துவிடுவார் என்று அவர் கூறியிருக்கிறார். 1992ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஷேன் வார்னே, 2007ஆம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்ற அவர், அவருடைய கால கட்டத்தில் மிகச் சிறந்த வீரராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஷேன் வார்னேவை அப்போது பத்திரிக்கைகள் பாராட்டி எழுதியிருந்தாலும், கிரிக்கெட்டைத் தாண்டி அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைக்குறிய சம்பவங்களால், அதே பாத்திரிக்கைகளால் அதிகப் படியான விமர்ச்சனத்திற்கும் அவர் ஆளானார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளைப் பார்ப்பதால் ஷேன் வார்னே மன அழுத்தத்த்திற்கு ஆளானார்.

warne

அந்த அழுத்தத்த்தை போட்டியின்போது காட்டகூடாது என்பதாற்காகவே அவர் போட்டிக்கு முன்பாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டார் என்று கூறியிருக்கிறார் மைக்கேல் கிளார்க்.
பத்திரிக்கையாளர்கள் கொடுத்த அவ்வளவு மன அழுத்தத்தையும் தாண்டி அவர் களத்தில் அவ்வளவு அற்புதமாக செயல்பட்டதைப் பார்த்த பிறகுதான், அவருடைய மனம் எந்த அளவிற்கு உறுதியானதாக இருக்குமென்று நான் தெரிந்துகொண்டேன். ஆனால் களத்தை விட்டு சென்றதும் அவரின் மன அழுத்தம் மீண்டும் அவரை தொடர்ந்து வரும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தார்.

- Advertisement -

Warne 1

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அவர் கூறினார் ஷேன் வார்னே, கிரக்கெட் விளையாடிய காலத்தில் மட்டுமல்லாது அதிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட , சில சொந்த விவகாரங்களால் பத்திரிக்கையாளர்களின் விமர்ச்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement