டெல்லி கேப்பிடல் அணியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர். எனக்கு ஐ.பி.எல் முக்கியமில்லை – அவரே கொடுத்த ஷாக்

DC
- Advertisement -

13ஆவது ஐபிஎல் தொடர் வரும் 29ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த முறையாவது எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என டெல்லி கேப்பிடல் அணி கடுமையாக முயற்சி செய்து வருகிறது . சென்றமுறை ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக மாற்றியதியிலிருந்து அந்த அணியில் அதிரடியான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

iyer

குறிப்பாக இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக மாற்றியதிலிருந்து டெல்லி அணி இளம் வீரர்கள் கொண்ட படையாக மாற்றியுள்ளனர். அந்த அணியில் ரிஷப் பண்ட், கீமோ பால், அக்சர் படேல் என பல இளம் வீரர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வருட ஏலத்திற்கு முன்பாக அஜின்கியா ரஹானே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய திறமை வாய்ந்த அனுபவ வீரர்களையும் மற்ற அணிகளிடமிருந்து பெற்றுள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

woakes 1

அதனை தொடர்ந்து ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோயனிஸ், ஜேசன் ராய் ஆகிய வீரர்களையும் ஏலத்தில் எடுக்க எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்நிலையில் டெல்லி அணியில் ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்ம.

- Advertisement -

ஆம் அவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஏனெனில் வரும் ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து அணி வீரர்கள் பெரும்பாலும் டெஸ்ட் தொடருக்கு முன்னுரிமை அளிப்பதையே விரும்புகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு காயம் ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் கிறிஸ் வோக்ஸ். அவரின் இந்த முடிவினை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.

Advertisement