அதை நினச்சா அவமானமா இருக்கு.. ஆனா இளம் இந்திய அணியிடம் அந்த தில் இருக்கு.. கிறிஸ் ஓக்ஸ் பேட்டி

Chris Woakes
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அதற்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

அந்தத் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டி நார்த்தம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 348 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேஎல் ராகுல் சதத்தை அடித்து 116, துருவ் ஜுரேல் 52 கருண் நாயர் 40 ரன்கள் எடுத்து கை கொடுத்தனர்.

- Advertisement -

அவமான நிலை:

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு கிறிஸ் ஓக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்நிலையில் அந்தப் போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பான சதத்தை அடித்ததாக கிறிஸ் ஓக்ஸ் பாராட்டியுள்ளார். மேலும் அடுத்து நடைபெறும் முதன்மை தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தரமான வீரர்கள் விளையாட மாட்டார்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவமானமான விஷயம் என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே சமயம் தங்களுடைய இங்கிலாந்து அணிக்கு சவாலைக் கொடுக்கும் அளவுக்கு இளம் இந்திய அணியிடம் திறமை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஓக்ஸ் பேசியது பின்வருமாறு. “முதல் நாளில் கொஞ்சம் சவாலாக இருந்த பிட்ச்சில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடிய நல்ல சதத்தை அடித்தார். பிட்ச் சிறிது நேரத்தை தவிர்த்து மற்ற அனைத்து நேரங்களிலும் பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுத்தது”

- Advertisement -

தில்லான இளம் இந்தியா:

“இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவது எப்போதும் நல்லதாக இருக்கும். ஏனெனில் அந்தத் தொடரில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு கடினமாக சண்டையிட வேண்டும். கடந்த பல வருடங்களாக நாங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு எதிராக நல்ல போட்டியைக் கொண்டிருந்தோம். தற்போது அவர்கள் இங்கே இல்லாதது இந்தப் போட்டிக்கு அவமானமானது”

இதையும் படிங்க: தோனி மட்டும் அந்த முடிவை எடுத்தா அது சி.எஸ்.கே அணிக்கு மிகப்பெரிய இழப்பு – மைக்கல் கிளார்க் கருத்து

“இருப்பினும் இந்திய கிரிக்கெட்டில் ஆழமான திறமை இருக்கிறது. இங்கே வந்துள்ள வீரர்கள் ஏற்கனவே தங்களுடைய திறமைகளை நிரூபித்த உயர்தரமானவர்களாக இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் ஒரு பயிற்சி போட்டியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement