867 ஓவர்களில் முதன்முறை நோபால் போட்டு கஷ்டப்பட்ட வோக்ஸ். அந்த நோபாலில் என்ன நடந்தது தெரியுமா ?- விவரம் இதோ

Woaks
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய தொடரான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து முடிவடைந்துள்ளது. இந்தத் தொடரில் இரு அணிகளும் வெற்றி தோல்வியின்றி 2-2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடர் இம்முறை சமனில் முடிந்தது. சென்ற முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றியது.

Woaks 1

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான க்றிஸ் வோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது வாழ்நாளில் முதல்முறையாக நோபால் ஒன்றினை வீசினார்.

கிட்டத்தட்ட 867 ஓவர்களுக்குப் பிறகு வோக்ஸ் தனது முதல் நோபாலை வீசினார். அந்த முதல் நோபால் அவருக்கு பெரும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் யாதெனில் இதுவரை சிறப்பாக பந்து வீசிய வோக்ஸ் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் நோபால் வீசியதே கிடையாது. இந்நிலையில் அவர் முதன்முறையாக வீசிய நோபால் ஆஸ்திரேலிய அணியின் மிச்செல் மார்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது.

Umpire

வோக்ஸ் வீசிய அந்த நோபாலில் மிச்செல் மார்ஷ் ஸ்லிப் திசையில் கேட்ச் ஆகி அவுட் ஆகினர். ஆனால் உடனே அவர் அம்பயர் நோபால் என்று அறிவித்தார். இதனால் அந்த இடத்தில் வோக்ஸ் சற்று மனமுடைந்து நின்றார். உடனே அவரை சக வீரர்கள் ஆறுதல் படுத்தி அவரை சமாதானப்படுத்தினர்.

Advertisement