என்னை விடுங்க. இவறமாதிரி டி20 பேட்டிங் விளையாட யாராலும் முடியாது – சக வீரரை பாராட்டிய மோரிஸ்

Morris
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தெரிவு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே குவித்தது. துவக்க வீரராக ப்ரித்வி ஷா2 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டம் இருந்து வெளியேற 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.

morris

- Advertisement -

அதன்பின்னர் ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இணைந்தனர். சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னிஸ் டக் ஆகி வெளியேற 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியது. அப்போது அணியை சரிவில் இருந்து மீட்ட ரிஷப் பண்ட் ஆகியோரது லலித் யாதவ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய லலித் யாதவ் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஒருபுறம் பண்ட் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார்.

இறுதிவரை களத்தில் இருந்தால் பெரிய ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட் 51 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் டாம் கரன் 21 ரன்கள் மற்றும் கிறிஸ் வோக்ஸ் 15 ரன்கள் அடிக்க டெல்லி அணி தட்டுத்தடுமாறி 147 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் பட்லர் 2 ரன்களிலும், வோரா 9 ரன்களிலும், சாம்சன் 4 ரன்களிலும், துபே இரண்டு ரன்களிலும் ஆட்டமிழக்க 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தள்ளாடியது.

பின்னர் மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் மட்டும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அவரும் 43 பந்துகளில் 62 ரன்களை குவித்து இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேற போட்டி டெல்லி அணிக்கு சாதகமாக மாறியது. ஆனால் இறுதி நேரத்தில் ராகுல் திவாதியா மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்களுடன் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த கிறிஸ் மோரிஸ் கூறுகையில் : டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அதேவேளையில் மில்லர் இந்த போட்டியில் முக்கிய கட்டத்தில் யாரும் விளையாட முடியாத ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் இறுதியில் நடக்கும். இந்த போட்டி எங்களுக்கு சாதகமாக அமைந்தது மகிழ்ச்சி.

miller

இந்த மைதானத்தில் பனிப்பொழிவு இருந்ததால் பந்து ஸ்கிட் ஆகி வந்தது. இருப்பினும் இந்த போட்டியில் நான் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பது தெரியும். என்னால் பந்தினை சிறப்பாக சுழற்றி அடிக்க முடியும் அதுவே எனது அதிரடிக்கும் காரணம். மேலும் டி20 கிரிக்கெட்டில் இது போன்று தான் விளையாட வேண்டும் என்றும் கிறிஸ் மோரிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement