பீட்டர்சனின் கிண்டலான பேச்சுக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்த கிரிஸ் மோரிஸ் – விவரம் இதோ

Morris

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது. பின்பு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

miller

இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். தனது இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் தன்னைக் கேவலப்படுத்திய முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கிறிஸ் மோரிஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்கு முந்தைய போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் பரிதாபமாக தோற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

அப்போட்டிக்கு பின்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கிறிஸ் மோரிஸ் ஒரு சாதாரண வீரர் என்றும், அவருக்கு 16 கோடி ரூபாய் என்பது மிகவும் அதிகம். அவரால் ராஜஸ்தான் அணிக்கு சிறப்பாக செயல்பட முடியாது என்று கூறியும் கிறிஸ் மோரிசை கேவலப்படுத்தி இருந்தார்.

ஆனால் நேற்று நடந்த போட்டியில் முக்கியமான நேரத்தில் பந்துவீசிய கிரிஸ் மோரிஸ் கொல்கத்தா அணிக்காக இதற்கு முந்தைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரு ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரன் குவிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் தன்னைக் கேவலப்படுத்திய பீட்டர்சனுக்கு பதிலடி தந்துள்ளார் கிறஸ் மோரிஸ் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

morris 1

இப்போட்டிக்கு முன்பு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அந்த போட்டியிலும் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளை விளையாடி 36 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்படத்தக்கது.