இந்தாண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கண்டிப்பு இவர்தான். இந்திய இளம் வீரரை பாராட்டிய – கிறிஸ் மோரிஸ்

தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் மோரிஸ் இந்த ஆண்டு பலத்த போட்டிக்கு இடையே ஒரு பெரிய தொகைக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். மிக அதிக விலைக்கு ஏலம் போன கிரிஸ் மோரிஸ் இந்த தொடரில் இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார் என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக ஒரு போட்டியில் பேட்டிங் மூலம் ராஜஸ்தான் அணிக்கு ஒரு போட்டியில் வெற்றியையும் தேடிக் கொடுத்துள்ளார்.

Morris-2

இந்நிலையில் தற்போது இந்தியாவில் பெருகி வரும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஐபிஎல் நிறுத்தப்பட்டுள்ளது. கடுமையான பயோ பபுள் விதிமுறைகளையும் மீறி போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதன்காரணமாக இந்த 14வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்து பல்வேறு அணியின் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கிரிஸ் மோரிஸ் இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த கண்டுபிடிப்பாக உருவாகியுள்ள வீரர் குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

sakariya

அதன்படி இந்த 14வது ஐ.பி.எல் சீசனின் சிறந்த வீரர் சேத்தன் சக்காரியா தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்து வீசி அவர் ராயுடு, ரெய்னா, தோனி ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் ராஜஸ்தான் அணியின் கண்டுபிடிப்பு மட்டுமின்றி இந்திய அளவிலும் சிறந்த வீரராக வரவும் சேத்தன் சகாரியாவுக்கு வாய்ப்புள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

Sakariya

இந்த சீசனில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்ற சேத்தன் சகாரியா 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி சரியான லென்த் அன்ட் லைன், வேகம் குறைந்த பந்துகள், பவுன்சர் என பல வித்தியாசங்களில் பந்துவீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வரும் இவர் சிறந்த பவுலர் என்றே கூறலாம்.

Advertisement