படிக்கல் பேட்டிங்கை பார்க்கும்போது மிகப்பெரிய லெஜென்டான இவரை பார்ப்பது போலவே உள்ளது – க்றிஸ் மோரிஸ் புகழாரம்

Padikkal 3

இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி ஐபிஎல் தொடர் நடந்து முடிவடைந்து விட்டது மேலும் ரசிகர்கள் இல்லாமல் இந்த தொடர் நடத்தப்படுவதால் இளம் வீரர்களுக்கு பெரும் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக ஆடுவதற்கான வழி பிறந்துள்ளது என்றே கூற வேண்டும். இதன் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் பல இளம் வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.

தேவ்தத் படிக்கல்(ஆர்சிபி), ராகுல் டெவாட்டியா(ராஜஸ்தான்), ரியான் பராக்(ராஜஸ்தான்), ஷுப்மன் கில்(கேகேஆர்), இஷான் கிஷன்(மும்பை இந்தியன்ஸ்) ரவி பிஷ்னோய்(பஞ்சாப்), வாஷிங்டன் சுந்தர்(ஆர்சிபி), டி.நடராஜன்(சன்ரைசர்ஸ்), கார்த்திக் தியாகி(ராஜஸ்தான்), போன்ற பல இளம் வீரர்கள் இந்த வருடம் தங்களது திறமையை என்னவென்று அனைவருக்கும் காட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் குறிப்பாக பெங்களூரு அணியின் இளம் வீரர் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் தொடர் துவங்குவதற்கு முன்பிருந்தே நன்றாக பயிற்சி செய்து தற்போது தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

padikkal

10 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 321 ரன்கள் குவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக விராட் கோலி மட்ற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகியோரை மட்டுமே பெங்களூர் அணி சார்ந்து இருந்தது. இந்நிலையில் இவரது வருகை அந்த அணிக்கு புத்துணர்ச்சி அளித்து இருக்கிறது இது குறித்து பேசிய அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் கூறியதாவது…

- Advertisement -

Hayden

படிக்கல் குறித்து பேசிய கிறிஸ் மோரிஸ், தேவ்தத் படிக்கல் அபாரமான பேட்ஸ்மேன். மேத்யூ ஹைடனை போன்று ஆடுகிறார் படிக்கல். ஹைடன் பெரிய செஸ்ட்டை கொண்டவர். படிக்கல் உடல் ரீதியாக ஹைடனை போன்றவர் அல்ல. ஆனால் டெக்னிக் மற்றும் பந்தை அடிக்கும் விதத்தில் ஹைடனை அப்படியே பிரதிபலிக்கிறார் படிக்கல் என்று கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ரசிகர்கள் படிக்கல்லின் பேட்டிங்கை யுவ்ராஜ் சிங்குடன் ஒப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.