அஷ்வின் போன்று “மான்கட்” செய்ய முயன்ற க்றிஸ் மோரிஸ் – வைரல் வீடியோ

Morris

கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டி தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான ரவிச்சந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் அணியை சேர்ந்த பேட்ஸ்மென் பட்லரை “மான் கட்” முறையில் ரன்அவுட் செய்து வெளியேற்றினார். அந்த மான் கட் ரன் அவுட் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் அதே போன்று செய்வேன் என்று அஸ்வின் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 தொடரான பிபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஒரு மான் கட் செயல் நடைபெற்றுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் மோரிஸ் ஓடி வரும்போது கையிலிருந்து பந்தினை தவறவிட்டார். கிரீசுக்கு வருவதற்குமுன் பந்து கீழே விழுந்ததால் அதனை அப்படியே சமாளித்து ஸ்டம்ப் அருகே சென்று மான் கட் செய்வதுபோல பேட்ஸ்மேனை ஏமாற்றினார்.

ஆனால் பந்து அவர் கையில் இல்லை என்பது தெரிந்து பேட்ஸ்மேன் அவரை நோக்கி சிரிக்க மோரிசும் அவரைப் பார்த்து சிரித்து விட்டு பின்பு திரும்பி சென்றார். கிரிஸ் மோரிஸ் செய்த இந்த செயல் அஸ்வினின் மான்கட்டை ஞாபகப்படுத்தி உள்ளது என்று இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.