அதிரடி புயலை வெறும் 2 கோடிக்கு வாங்கி அசத்திய மும்பை. முதல் வீரரே அமர்க்களம் தான் – விவரம் இதோ

Mi
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

auction-1

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அதனை போல மும்பை அணியும் தங்களது வீரர்களை தெளிவாகவும் நேர்த்தியாகவும் தேர்வுசெய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக மும்பை அணி வாங்கிய வீரர்களில் முதல் வீரரே சிறப்பான வீரர் என்றால் அதனை நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

மும்பை அணி முதல் வீரராக க்றிஸ் லின்னை வாங்கியது. ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான இவரை அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு அறிவித்தபோது எந்த அணியும் அவரின் ஏலத் தொகையை அதிகரித்து கேட்கவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மும்பை அணி இரண்டு கோடி ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு அவரை வாங்கியது. இது ஒரு சிறப்பான தேர்வாகும். ஏனெனில் இவர் 5 ஓவர் வரை நின்றால் கூட மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மிக அபாயகரமான வீரர்.

சமீபத்தில் நடைபெற்ற டி10 போட்டியில் கூட இவரது அதிரடி அனைவரையும் வியக்க வைத்தது. மேலும் யுவராஜ் சிங் கூட இவரது ஆட்டத்தை பாராட்டி இருந்தார். நிச்சயம் மும்பை அணிக்கு இவர் ஒரு மிகப் பெரிய வீரராக இந்த ஐபிஎல்லில் திகழ அதிக வாய்ப்புள்ளது. கெயிலுக்கு நிகராக துவக்க ஓவர்களில் அதிரடியில் கலக்கக்கூடிய இவரை மும்பை அணி இரண்டு கோடிக்கு அடிப்படையிலேயே வாங்கியது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Advertisement