சாம்பியன் சென்னையை இந்த முறை நொறுக்கி தள்ளுவேன் – க்றிஸ் லின்

Lynn
- Advertisement -

இந்த வருடம் 12 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் நாளை மறுதினம் சென்னையில் துவங்குகிறது. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ipl cup

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இரண்டுமுறை ஐபில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த தொடரை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் அதிரடி துவக்க வீரரான க்றிஸ் லின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் க்றிஸ் லின் கூறியதாவது : இந்த ஐபில் தொடரை எதிர்கொள்ள எங்களது அணி முழுபலத்துடன் உள்ளது. மேலும், கடந்த முறை கோப்பையை வென்ற சென்னை அணிக்கு இந்த முறை கடுமையான போட்டியாக எங்களது கொல்கத்தா அணி திகழும். எங்களது அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சமபலத்துடன் தற்போது உள்ளது.

chris

எனவே, இந்த தொடரில் எங்களது அணி நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்வோம் என்று க்றிஸ் லின் கூறினார். கடந்த தொடரில் கொல்கத்தா அணிக்காக சுனில் நரேன் மற்றும் க்றிஸ் லின் ஆகியோர் அதிரடியான துவக்கத்தை தந்து ஆபத்தான ஜோடியாக விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement