வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க வீரரான கிறிஸ் கெய்ல் 1999 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் 103 டெஸ்ட் போட்டிகள், 301 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் சமீபகாலமாக விளையாட வில்லை என்றாலும் 41 வயதிலும் அவரது சிறப்பான அதிரடி காரணமாக டி20 போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
எதிர்வரும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடி வரும் கெயில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடரின் 4வது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் விளையாடிய அவர் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இருந்து பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீசும் போது சிறப்பாக செயல்பட்டு அவர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைத் துரத்திய தென்ஆப்பிரிக்கா அணி 146 ரன்கள் மட்டுமே குவிக்க 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே சவுத் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஹென்றிக்ஸை ஆட்டமிழக்கச் செய்த கெயில் அந்த விக்கெட்டை கொண்டாடுவதற்கு அடித்த பல்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"The guys recommend for me to follow Kevin Sinclair's celebration."
Nailed. It. 💯#WIvSA pic.twitter.com/03jAqyakLf
— Cricket on BT Sport (@btsportcricket) July 1, 2021
41 வயதிலும் அவரது இந்த நகைச்சுவையான குணம் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அவர் அடித்த இந்த பல்டி வீடியோவும் தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.