பேட்டில் இருக்கும் பெயருக்கு மரியாதை கொடுங்க. பவுலர்களை எச்சரித்த கெயில் – விவரம் இதோ

Gayle
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKXIP

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 45 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 25 ரன்களும் அடித்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

துவக்க வீரர்களான அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 8 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்த அவர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர். அதன் பிறகு மூன்றாவதாக கிறிஸ் கெயில் வந்து தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் நிக்கலஸ் பூரன் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் 45 பந்துகளை சந்தித்த கிறிஸ் கெய்ல் 53 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் பின்னர் அரை சதம் அடித்ததும் தனது பேட்டியில் பதிந்திருக்கும் “தி பாஸ்” என்ற வார்த்தையை அவர் சுட்டிக்காட்டினார். போட்டி முடிந்து பேட்டியளித்த அவர் : ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. அதனால் இரண்டாவதாக விளையாடிய போது கொஞ்சம் பரவாயில்லை. என்னை மூன்றாவது வீரராக களமிறங்க சொன்னார்கள். அதுதான் எனக்கு கொடுத்த பணி என் வேலையை சிறப்பாக செய்து முடிந்ததாக நினைக்கிறேன்.

Gayle 1

மேலும் துவக்க வீரர்களாக ஆடிய ராகுலும், அகர்வாலும் சிறப்பாகவே விளையாடினார்கள் என்று கருதுகிறேன். மேலும் நான் சொல்வது ஒன்றே ஒன்று மட்டும் தான் பேட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயருக்கு மரியாதை கொடுங்கள். கிரிக்கெட் விளையாடுவதற்கு உடல் தகுதி மிகவும் முக்கியம். எப்போதும் எனக்கு பெவிலியனில் இருந்து போட்டியைப் பார்ப்பது பிடிக்காது. உடல்நிலை சரியில்லை என்றாலும் களமிறங்கி விளையாடுவதே மகிழ்ச்சியைத் தரும். விரைவில் முழு உடல் தகுதி அடைவேன் என்று கெயில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement