ஐ.சி.சி செய்த தடையால் தான் நான் என் பேட்டில் இந்த மாற்றத்தை செய்தேன் – கிரிஸ் கெயில் பேட்டி

Gayle
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தற்போது 41 வயதிலும் இன்னும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாமல் விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மறுக்கப்பட்டு வந்தாலும் அவரது அபார ஆட்டம் காரணமாக மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்த தொடரின் மூலம் தன் மீது இருந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

gayle 1

- Advertisement -

முதல் 2 போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மூன்றாவது டி20 போட்டியில் 38 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14.5 ஓவர்களிலேயே 142 ரன்களை சேஸிங் செய்ய உதவினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி அணியை வீழ்த்தி மட்டுமின்றி 3 – 0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

சர்வதேச கிரிக்கெட்டில் 41 வயதிலும் விளையாடி வரும் கெயில் தன்னை “யுனிவர்ஸ் பாஸ்” (Universe Boss) என்று அழைத்துக் கொள்வது உண்டு. அதே போன்று ரசிகர்களும் அவரை “யுனிவர்ஸ் பாஸ்” என்று அழைப்பார்கள். ஆனால் அந்த பேட் ஸ்டிக்கரை பயன்படுத்த ஐசிசி தடை விதித்ததால் தற்போது அவரது பேட்டில் சிறிய மாற்றத்தை செய்துள்ளார்.

Gayle

அதன்படி “யுனிவர்ஸ் பாஸ்” (Universe Boss) என்பதை நீக்கிவிட்டு “தி பாஸ்” (The Boss) என்று அவர் பேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். இது குறித்து கேட்கப்பட்ட கலகலப்பான பேட்டியில் அவர் கூறியதாவது : ஐசிசி என்னை “யுனிவர்ஸ் பாஸ்” ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது என்று கூறி விட்டது. அதனால் நான் அதனை சுருக்கி “தி பாஸ்” என்று என் பேட்டில் மாற்றத்தை செய்துள்ளேன் என்று பேட்டி அளித்துள்ளார்.

மேலும் ஐசிசி “யுனிவர்ஸ் பாஸ்” (Universe Boss) என்ற பெயருக்கு காப்புரிமை வாங்கி விட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு : முறையாக பார்த்தால் நான்தான் அதற்கு காப்புரிமை வாங்கி இருக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே அந்த பேட்டியை அவர் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement