- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரில் அவர் கண்டிப்பா ஆடியிருக்கனும்.. 27 வயது இந்திய வீரருக்கு ஆதரவாக பேசிய – கிரிஸ் கெயில்

அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தனர்.

இங்கிலாந்து தொடரில் அவர் ஆடியிருக்கனும் : கிரிஸ் கெயில் கருத்து

இதன் காரணமாக அனுபவ வீரர்கள் இல்லாமல் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து பயணித்ததால் இந்த தொடரில் அங்குள்ள சூழலை எவ்வாறு இந்திய அணி சமாளிக்கப் போகிறது? என்ற கேள்வியும் இருந்தது. ஆனால் இந்த தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.

- Advertisement -

இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி தேர்வு செய்யப்பட்டபோது ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது அப்போதே பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியது. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

சிறப்பாக விளையாடி வந்த அவரை நீக்கிவிட்டு சாய் சுதர்சன், கருண் நாயர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் நிச்சயம் இடம்பெற்று விளையாடி இருக்க வேண்டும் என்றும் அவரது நீக்கம் சரியானது அல்ல என்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை சர்பராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய மண்ணில் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி முதல்தர போட்டிகளிலும் ரெட் பால் கிரிக்கெட்டில் அட்டகாசமாக ஆடி வருகிறார். எனவே அவருக்கு சரியான வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : இதை செஞ்சும் கழற்றி விட்டு விரக்தியடைய விட்டாங்க.. நமக்கு இந்தியாவின் வெற்றியே முக்கியம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

அண்மையில் கூட உடல் எடையை குறைத்து அவர் நன்றாக விளையாடி வருகிறார். அதையும் நான் பார்த்து வருகிறேன். இப்படி ஒரு திறமையான வீரர் நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் இருக்க வேண்டும் அந்த வீரருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கெயில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -