டி20 கிரிக்கெட்டில் 41 வயசுல அசுரத்தனமான இமாலய சாதனையை நிகழ்த்திய கெயில் – ஆஸி அணிக்கெதிராக அபாரம்

Gayle
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 141 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

aus vs wi

- Advertisement -

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் 41 வயதாகும் கிரிக்கெட் டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைத்த இமாலய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

அதன்படி இந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் 30ஆவது ரன்னை கடந்தபோது டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். 41 வயதாகும் இவர் இதுவரை 431 டி20 போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் மற்றும் 86 அரை சதங்கள் என 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கிறார்.

gayle 2

இந்த கணக்கு சர்வதேசப் போட்டிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் நடைபெறும் டி20 போட்டிகளின் முடிவில் எடுக்கப்பட்டவை. இவருக்கு அடுத்தபடியாக பொல்லார்ட் 10836 ரன்களையும், மூன்றாவது இடத்தில் சோயிப் மாலிக் 10741 ரன்களுடனும், 4வது இடத்தில் டேவிட் வார்னர் 10017 ரன்களுடனும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9922 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement