சென்னை அணியின் கேப்டன் யார்? இவரா? அவரா? – வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் பதில்

Advertisement

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் எதிர்வரும் 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்று முடிந்தது. இந்த ஐ.பி.எல் ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த அணியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது அணிகளுக்கு தேவையான வீரர்களை மற்ற அணிகளுடன் போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.

CSK Ms DHoni

அந்த வகையில் இந்த ஐ.பி.எல் ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு ஏகப்பட்ட மவுசு இருந்தது. குறிப்பாக ஐ.பி.எல் வரலாற்றில் அதிவிலைக்கு சாம் கரன் ஏலம் போனார். அதேபோன்று மும்பை அணிக்காக கேமரூன் க்ரீன் அதிக தொகைக்கு ஏலம் போனார். அதே போன்று இந்த ஐ.பி.எல் 2023 மினி ஏலத்தில் 3 ஆவது அதிகபட்ச தொகையாக 16.25 கோடி பென் ஸ்டோக்ஸ் சி.எஸ்.கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

இப்படி சி.எஸ்.கே அணி 16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸ்ஸை தேர்வு செய்ததும் இவரே சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்று சில விவாதங்கள் சமூக வலைத்தளத்தில் எழுந்தன. அதோடு சி.எஸ்கே.கே அணி இம்முறை சரியான வீரரை தேர்வு செய்துள்ளது என்றும் தோனிக்கு அடுத்து இவர்தான் கேப்டன் என்ற பேச்சும் அதிகளவில் இருந்து வருகிறது.

Ben Stokes

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கேள்விக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாமாபாவன் கிரிஸ் கெயில் விமரிசையான ஒரு பதில் அளித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. அந்தவகையில் கிரிஸ் கெயில் கூறியதாவது :

- Advertisement -

தோனி விளையாடும்வரை அவரே சி.எஸ்.கே அணியின் கேப்டனாக இருப்பார். ஒரே அணியில் தோனி, ஸ்டோக்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இருக்கப்போவது அந்த அணிக்கு நல்லது. அதேபோன்று டுவைன் பிராவோ போன்றோரும் இருப்பது அந்த அணிக்கு நல்லது. அதேபோன்று பென் ஸ்டோக்ஸ் ஒதுங்கி அமர்ந்து தோனி அவரது காரியத்தை செய்ய விடுவார் என்று நம்புகிறேன். இளம் வீரர்களும் பென் ஸ்டோக்ஸ்சிடம் பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : வீடியோ : எப்டியோ ஜெய்ச்சுட்டோம்ல, எதுக்கெடுத்தாலும் விமர்சிக்காதிங்க – கவாஸ்கர், அஜய் ஜடேஜாவுக்கு புஜாரா பதிலடி

என்னை பொறுத்தவரை சென்னை அணிக்கு பென் ஸ்டோக்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் தேவை. அவரும் சென்னை அணியின் கலாச்சாரத்துடன் ஒத்துப்போவார் என்று நினைக்கிறன். எனவே தோனி இருக்கும்வரை தோனி தான் கேப்டன் என்றும் அடுத்த கேப்டனாக தோனி யாரை காண்பிக்கிறாரோ அவரே கேப்டன் என்றும் கிரிஸ் கெயில் சொல்லாமல் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Advertisement