ஆட்டமே இனிமேல் தான் ஆரம்பம் – டி20 உ.கோ பைனலில் விளையாடப் போகும் அணிகள் பற்றி கெயில் கருத்து

- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட 16 அணிகள் போட்டி போட காத்திருக்கின்றன. இன்னும் 5 நாட்களில் திருவிழாவாக துவங்கும் இத்தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற கணிப்புகள் கடந்த ஒரு மாதமாகவே வெளியாகி வருகின்றன.

wivsaus

- Advertisement -

அதில் தற்சமயத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் ஃபைனலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக பெரும்பாலான முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கணிப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் இந்த தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் தங்களுடைய வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக செயல்பட்டு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும் என்று டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கராக போற்றப்படும் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தைரியமான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆட்டம் ஆரம்பம்:
21ஆம் நூற்றாண்டில் என்னதான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில், ப்ராவோ, பொல்லார்ட், நரேன், ரசல், சிம்மன்ஸ், மர்லான் சாமுவேல்ஸ என காட்டடி முரட்டுத்தனமான வீரர்களை கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் எதிரணிகளை அசால்ட்டாக பந்தாடும் அணியாக வலம் வந்தது. குறிப்பாக 1 முதல் 11 வரை அந்த அணியில் இடம் பிடித்திருக்கும் அத்தனை பேரும் அசால்டாக சிக்ஸர்களை பறக்கவிடும் பேட்ஸ்மேன்களாக இருந்ததால் 2012இல் இலங்கையில் நடைபெற்ற உலகக்கோப்பையை டேரன் சம்மி தலைமையில் வென்ற அந்த அணி 2016இல் இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் அதே வீரர்களுடன் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

IND vs WI T20I

அந்த வகையில் 2 டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே அணியாக சாதனை படைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் 2019க்குப்பின் டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக சரிந்துள்ளது. ஏனெனில் அதில் விளையாடும் ரசல், நரேன் போன்ற முக்கிய வீரர்கள் போதிய சம்பளம் கிடைக்காததால் நாட்டைப் புறக்கணித்துவிட்டு ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் முன்னுரிமை கொடுத்து விளையாடுகின்றனர். அதுபோக கெயில், ப்ராவோ, பொல்லார்ட் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் அதிரடிப் படையாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது கத்துக்குட்டியாக மாறி ஐசிசி தரவரிசையில் கீழே தவிக்கிறது.

- Advertisement -

அதன் காரணமாகவே இந்த உலக கோப்பையில் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாத அந்த அணி தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளை எதிர்கொண்டு அதில் வென்றால் மட்டுமே முதன்மை சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற பரிதாப நிலையில் உள்ளது. மேலும் புதிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் தலைமையில் ஜேசன் ஹோல்டர் போன்ற ஒருசில நட்சத்திர தரமான வீரர்களை தவிர பெரும்பாலும் அனுபவமற்ற வீரர்களை கொண்டுள்ள அந்த அணி சமீப காலங்களில் சொந்த மண்ணிலேயே இந்தியா போன்ற அணிகளுடன் தோற்றது.

chris-gayle

அதனால் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறாது என்ற எதிர்பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக செயல்பட்டு நிச்சயமாக பைனலில் விளையாடும் என்று கெயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனேகமாக பைனலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா மோதும் என்று நினைக்கிறேன். இருப்பினும் அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் கடினமாகும். ஏனெனில் பொல்லார்ட், ரசல், ப்ராவோ ஆகியோர் இல்லாத நிலைமையில் கேப்டனும் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்”

- Advertisement -

“இருப்பினும் தற்போதைய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் நிச்சயமாக திறமை வாய்ந்தவர்கள் என்பதுடன் எதிரணிக்கு ஆபத்தானவர்களாக செயல்படும் தன்மையை பெற்றுள்ளனர். மேலும் போட்டி நாளன்று சூழ்நிலைக்கேற்றவாறு உங்களை உட்படுத்திக் கொண்டு சரியான திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக செயல்பட்டால் வெற்றி தாமாக வரும் என்பது அனைவரும் அறிவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : அவர கழற்றி விடுங்க – இந்திய பவுலரை கலாய்த்து ரோஹித்தை எச்சரிக்கும் ரசிகர்கள், காரணம் என்ன

தற்போதைய அணியில் முக்கிய வீரர்கள் இல்லை என்றாலும் கோப்பையை வெல்லும் அளவுக்கு திறமையான அதிரடியான வீரர்கள் இருப்பதால் இம்முறை நிச்சயம் தங்களது அணி 3வது சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் என்று கெயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement