ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு விரக்தியில் பேட்டை தூக்கி எறிந்த கெயில் – வைரலாகும் வீடியோ

ஐபிஎல் தொடரில் 50 வது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

KXIPvsRR

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 63 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர் என 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் 46 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி

17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். இறுதி நேரத்தில் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 31 ரன்களையும், பட்லர் ஆட்டமிழக்காமல் 22 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Smith

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் 19-வது ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்திருந்தார். அதனால் கடைசி ஓவரில் நிச்சயம் அவர் சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருபதாவது ஓவரை ராஜஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஆர்ச்சர் வீசினார். அப்போது 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்றாவது பந்தில் சிக்சர் அடித்த கெயில் 99 ரன்களில் இருந்தார்.

- Advertisement -

இன்னும் ஒரு ரன் எடுத்தால் சதம் என்று இருந்ததால் எளிதில் அவர் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்ச்சரின் யார்க்கர் பந்தினை கணிக்க தவறி காலில் வாங்கி கிளீன் போல்டானார். ஒரு ரன் வித்தியாசத்தில் சதத்தை நழுவ விட்டதால் விரக்தி அடைந்த கெயில் தன்னுடைய பேட்டை மைதானத்தில் வீசி எறிந்தார்.

அவர் வீசிய பேட் யார் மீதும் படாமல் சற்று தூரம் தள்ளி விழுந்தது. மேக்ஸ்வெல் அதனை எடுத்துக் கொடுத்தார். சிறிது டென்ஷனான அவர் அடுத்த நொடியே அவரது நல்ல குணத்தை காட்டி அவருக்கு கைகொடுத்து அங்கிருந்து சென்றார். அவரின் செயல் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.