அதிரடி மன்னன் கிரிஸ் கெயில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

Gayle

கரோனா வைரஸ் தற்போது வரை உலகம் முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. உலகின் மின்னல் வேக வீரரான உசைன் போல்ட் சில தினங்களுக்கு முன்னர் தனது 34வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Dubai

இதன் பின்னர் தனக்கு கரோனா வைரஸ் இருப்பதாகவும் தன்னை சந்தித்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தியிருந்தார். பின்னர் யார் யார் என்று பார்த்ததில் அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இருந்திருக்கிறார். இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

மேலும், உடனடியாக கெயில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த வாரத்தின் முடிவில் அவருக்கு இரண்டு முறை கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் தொற்று அவருக்கு இல்லை என்று உறுதியான பின்னர் துபாய்க்கு செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gayle

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விடயத்தை கெயில் தெரிவித்துள்ளார். அதாவது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நான் செல்வதற்கு முன்னர் எனக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் துபாய் விமான நிலையத்திலும் பரிசோதனை நடத்தப்பட்டு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவேன்.

- Advertisement -

Gayle

அதன்பின்னர் மீண்டும் எனக்கு பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் கரோனா வைரஸ் இல்லை என்று உறுதியான பின்னர் பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும் எனது அணியுடன் இணைந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கிறிஸ் கெயில்.