தோற்றாலும்…வெற்றி பெற்ற அணியுடன் அசத்தலான டான்ஸ் ஆடிய கெய்ல் – வீடியோ

Chris
- Advertisement -

அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்குபெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுவந்தன.இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றின் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
Gayle1
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் 205ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 40.4 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியை கொண்டாடிடும் விதமாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.அப்போது தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கெயில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுடன் இணைந்து நடனமாடினார். பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement