1001 சிக்ஸர்களை அடித்து உலகசாதனை படைத்தாலும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கெயில் – எதற்கு தெரியமா ?

ஐபிஎல் தொடரில் 50 வது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

KXIPvsRR

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 63 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர் என 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் 46 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி

17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். இறுதி நேரத்தில் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 31 ரன்களையும், பட்லர் ஆட்டமிழக்காமல் 22 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Smith

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் மீண்டும் ஒருமுறை தனது அதிரடி வெளிப்படுத்தி 63 பந்துகளில் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் 8 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்த கிறிஸ் கெய்ல் முதல் இன்னிங்ஸ் இடைவேளைக்குப்பிறகு பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

gayle 2

41 வயதிலும் பவர்ஹிட் செய்வதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். 180 ரன்கள் என்பது போதுமானது என நினைக்கிறேன். இந்த பிட்ச் நன்றாக விளையாட உதவுகிறது. இறுதிவரை நின்று விளையாடியது மகிழ்ச்சி. 1001 சிக்சர்களை அடித்து ஒரு ரெக்கார்ட் ஆக உள்ளது அதற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் நான் சதம் அடிக்க வேண்டும் என விரும்பியவர்களை ஏமாற்றியதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்று அதை மிஸ் செய்து விட்டேன் இருந்தாலும் எனது இந்த ஆட்டத்தை சதம் அடித்தாகவே பார்க்கிறேன் என கெயில் கூறியது குறிப்பிடத்தக்கது.