கோலியை மிரட்ட காத்திருக்கும் ராகுல். காட்டடி அதிரடி வீரரை களமிறக்க திட்டம் – ராகுல் போட்ட ஸ்கெட்ச் இதோ

இந்த வருடத்தில் தொடரில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் சாதிக்கும் என்று நம்பிக்கை வைத்த அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. புதிய கேப்டனாக ராகுல், புதிய பயிற்சியாளராக கும்ப்ளே ஆகியோர் தலைமையில் சிறப்பாக விளையாடும் என்று கருதப்பட்ட அணி பஞ்சாப்.

kxipvsrcb

ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி 7 போட்டிகளில் 6 போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் பஞ்சாப் அணி ஒருவேளை தோற்றால் பிளே ஆப் இல்லாமல் போய்விடும்.

இதனால் அவர்கள் இன்றைய போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்த பெரிய திட்டத்தை வகுத்துள்ளனர். அந்த வகையில் தற்போது அந்த அணியில் இதுநாள் வரை களமிறங்காமல் இருந்த அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இன்றைய போட்டியில் இறக்க ராகுல் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

gayle

மேலும் ஏற்கனவே அந்த அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே கூறுகையில் : கடந்த போட்டியின் போது வயிற்று வலி காரணமாக கெயில் விளையாடவில்லை. அதனால் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

Gayle

ஏற்கனவே பேட்டியளித்த ராகுலும் தொடரின் முக்கிய கட்டத்தில் நிச்சயம் கெயில் அணிக்கு திரும்பி வெற்றி தேடித் தருவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களது பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற கடும் போட்டியளிக்கும் என்று தெரிகிறது.