டிக்கெட் ரேட் இருமடங்கு இருந்தாலும் தோனியின் ஆட்டத்தை நேரில் காண காத்திருக்கிறேன் – மனம்திறந்த முன்னாள் வீரர்

dhonidecision

தோனி இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி சுமார் 16 ஆண்டுகள் விளையாடிய தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த 4 நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்குப் பின்னர் இந்திய அணியில் தோனி இடம் பெறாமல் இருந்த தோனி திடீர் ஓய்வை அறிவித்தார். மேலும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனியை தற்போது ஐபிஎல் போட்டிகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Dhoni

ஐபிஎல் தொடங்க ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது சென்னையில் சிஎஸ்கே அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியில் கேப்டன் தல தோனியும் இணைந்து பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தோனி ஐபிஎல் இந்த ஆண்டு மட்டும் அல்ல 2021, 22 ஆகிய தொடர்களிலும் நிச்சயம் கேப்டனாக விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகி காசி விசுவநாதன் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோனி ஐ.பி.எல் தொடரில் விளையாட இருப்பதை காண ஆவலுடன் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மேலும் தனது விருப்பம் குறித்தும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் : அதிக நாட்களாள் விளையாட போகிறார் என்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். தோனி சமீபத்தில் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியாமல் போனது ஆனால் அது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை.

தற்போது சிஎஸ்கே அணிக்காக மீண்டும் அவர் விளையாட இருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து கூறுகையில் : தோனி தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட உள்ளதால் அவர் இப்போதைக்கு ஐ.பி.எல் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்று தெரிகிறது. மேலும் அவரது விளையாட்டை பார்க்க நான் ஆவலோடு இருக்கிறேன்.

- Advertisement -

Dhoni 1

போட்டியை காண டிக்கெட் விலை டபுள் மடங்கு இருந்தாலும் சரி அதைச் செலுத்தி மைதானத்தில் போட்டியை நேரில் பார்க்க வருவேன் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஐ.பி.எல் தொடரை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.