இந்த வருஷம் ஐ.பி.எல் சாம்பியன் இவங்கதான். நீங்க வேனா பாருங்க – முன்னாள் இந்திய வீரர் கணிப்பு

Rcb
- Advertisement -

இதுவரை 12 முறை ஐபிஎல் தொடரில் நடந்து முடிந்துவிட்டது. இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும் ஐ.பி.எல் கோப்பைகளை வென்றுள்ளது.

CskvsMi

வருடாவருடம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விராட் கோலியின் தலைமையில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. எப்படியாவது ஒவ்வொரு முறையும் வென்றுவிடலாம் என்று தொடரில் கலந்து கொள்ளும் அந்த அணி கடைசியில் பரிதாபத்தில் தான் சென்று முடிந்துள்ளது. அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும் பந்துவீச்சாளர்கள் சொதப்பலினால் அந்த அணி தோல்வியையே தழுவி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடப்பதன் மூலமாக பெங்களூரு அணிக்கு தான் சாதகம் அதிகம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்…

Chopra

துபாய் மைதானங்கள் மிகப் பெரியது பந்துவீச்சு சிறப்பாக இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும். பெரிதான பந்துவீச்சு இல்லாத அணிகளுக்கு இங்கு பெரிய பிரச்சனை காத்திருக்கிறது. பெங்களூரு போன்ற அணிகளுக்கு இங்கு ஐபிஎல் தொடர் நடப்பது மிகவும் சாதகமான விஷயமாக இருக்க போகிறது.

Rcb

மேலும் ஏற்கனவே பெங்களூரு அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக இருக்கிறது. ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி என பலரும் இருக்கிறார்கள் அதனை தாண்டி தற்போதைய அணியில் சிறப்பான பந்து வீச்சும் இருக்கிறது. அதேபோல் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இங்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக பெங்களூர் அணிக்கு இங்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Advertisement