இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி சந்திக்கவுள்ள பெரிய சிக்கல் – முன்னாள் இந்திய வீரர் எச்சரிக்கை

MI

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணி அவர்களது மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது. மேலும் அதிகமாக இந்த அணிதான் அதிக முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த அணி மிகப் பெரிய நட்சத்திர வீரர்களை உருவாக்கியும், நட்சத்திர வீரர்களை தனது அணிக்கு வாங்கியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக வருடாவருடம் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை உருவாக்குவதே இந்த அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கும். லசித் மலிங்கா போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் இந்த அணைக்காக தான் பெரிதாக ஆடியுள்ளனர். வருடாவருடம் மற்ற அணிகள் எல்லாம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக தங்கள் அணியை உருவாக்கி வந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உருவாக்கி வந்தது.

இந்த முறையும் அதே தவறை செய்து விட்டது என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார் . அதாவது ஐக்கிய அரபு அமீரக ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வை குறிப்பாக முதல் பாதியில் ஆடுகளங்கள் உயிர்ப்பு தன்மையுடன் இருந்தாலும், இரண்டாவது பாதியில் மந்தமாகி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகி விடும்.

Krunal

இதன் காரணமாக இரண்டாவது பாதியில் எந்த அணி மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கிறதோ அந்த அணிதான் நன்றாக விளையாடும். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை வழக்கமாக முதலில் பல போட்டிகளில் தோற்று விட்டு கடைசியில் வரும் 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற்று தான் ஒவ்வொரு முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

ragul chahar

இந்த முறை சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் இல்லை என்பதால் அந்த வாய்ப்பும் பறிபோகும் என்று தெரிகிறது இதனைத்தான் ஆகாஷ் சோப்ரா சூசகமாக தெரிவித்திருக்கிறார்.